Home செய்திகள் ஆகஸ்ட் 31ம் தேதி இராமநாதபுரத்தில் கின்னஸ் உலக சாதனை நிகழ்ச்சி பள்ளி மாணவர் 5 ஆயிரம் பேர் பங்கேற்பு

ஆகஸ்ட் 31ம் தேதி இராமநாதபுரத்தில் கின்னஸ் உலக சாதனை நிகழ்ச்சி பள்ளி மாணவர் 5 ஆயிரம் பேர் பங்கேற்பு

by mohan

இராமநாதபுரத்தில் பள்ளி மாணவர் 5 ஆயிரம் பேர் பங்கேற்கும் கின்னஸ் உலக சாதனை நிகழ்ச்சி ஆகஸ்ட் 31 ஆம் தேதி நடைபெற உள்ளது. SPACE KIDS INDIA மற்றும் STUDENTS SCIENCE FORUM இணைந்து நடத்துகிறது. இதில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 5 ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்கள் கலந்து கொண்டு விண்வெளி விழிப்புணர்வு கின்னஸ் உலக சாதனை நடை பெற உள்ளது. தமிழக தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் மணிகண்டன், மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ், காவல் கண்காணிப்பாளர் ஓம் பிரகாஷ் மீனா மற்றும் விண்வெளி, அணுசக்தி, எரிசக்தி துறை விஞ்ஞானிகள், கல்வி அதிகாரிகள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பங்கேற்க உள்ளனர். இதன் மூலம் விண்வெளி ஆராய்ச்சியில் மாணவர்களுக்கு ஈடுபாடும், ஆர்வமும் இஸ்ரோ துறையில் இணைவது பற்றிய தகவல்களும் உலகின் மிகச் சிறிய செயற்கை கோள் கலாம் சாட் உருவான விதம் குறித்து விளக்கம் அளிக்கப்படும். கின்னஸ் உலக சாதனை நிகழ்ச்சியில் பங்கேற்கும் மாணவர்களுக்கு சான்றிதழ், பள்ளிகளுக்கு நினைவு பரிசு வழங்கப்படும். கின்னஸ் உலக சாதனை நிகழ்ச்சியில் பங்கேற்க விரும்பும் மாணவ, மாணவியர் தாங்கள் பயிலும் பள்ளியை தொடர்பு கொண்டு ஆக., 20 ஆம் தேதிக்குள் பெயர் பதிவு செய்து கொள்ளலாம் என இராமநாதபுரம் மாணவர் அறிவியல் பேரவை, சென்னை ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா தெரிவித்துள்ளது. கூடுதல் விவரங்களுக்கு 94431 62571, 95977 81814, 97515 55588, 96558 16364 ஆகிய அலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளது.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!