Home செய்திகள் தேர்தல் நடத்தை விதி அமலில் இருப்பதால், ஆவணமின்றி கையில் எவ்வளவு பணம் எடுத்து செல்லலாம்..?

தேர்தல் நடத்தை விதி அமலில் இருப்பதால், ஆவணமின்றி கையில் எவ்வளவு பணம் எடுத்து செல்லலாம்..?

by Askar

தேர்தல் நடத்தை விதி அமலில் இருப்பதால், ஆவணமின்றி கையில் எவ்வளவு பணம் எடுத்து செல்லலாம்..?

நாடளுமன்ற தேர்தல் நடத்தை விதி அமலில் உள்ளதால் எவ்வளவு பணம் கையில் எடுத்து செல்லலாம் என பலரும் குழம்பி உள்ளனர். இனி குழப்பம் வேண்டாம். அதாவது நடத்தை விதி அமலில் இருந்தாலும் கூட பொதுமக்கள் ரூ.50 ஆயிரத்துக்குள்ளான ரொக்கப்பணத்தை தாராளமாக எடுத்து செல்லாம். பறக்கும்படையினர் மறித்தால் பணத்துக்கான உரிய காரணத்தை கூறிவிட்டு செல்லலாம்.

மாறாக ரூ.50 ஆயிரத்துக்கும் அதிகமான பணத்தை கையிலோ, பைக், காரிலோ எடுத்த செல்லும்போது பறக்கும்படையினர், போலீசார் தடுத்து நிறுத்தினால் அதற்கான உரிய ஆவணங்களை கட்டாயம் வழங்க வேண்டும். இல்லாவிட்டால் பணம் பறிமுதல் செய்த கருவூலத்தில் ஒப்படைக்கப்படும். மேலும் ரூ.10 லட்சம் மற்றும் அதற்கு அதிகமான பணம் பறிமுதல் செய்யப்பட்டால் அதுபற்றி உடனடியாக வருமான வரித்துறைக்கு தகவல் தெரிவிக்கப்படும்.

இப்படி பணம் பறிமுதல் செய்யப்படும்போது பணத்துக்கான உரிய ஆவணத்தை வீடு, அலுவலகங்களுக்கு சென்று எடுத்து வந்து காண்பிக்கலாம். அது சரியான ஆவணமாக இருக்கும்பட்சத்தில் உங்களிடம் பறிமுதல் செய்யப்பட்ட பணம் மீண்டும் ஒப்படைக்கப்படும். இல்லாவிட்டால் அந்த பண பறிமுதல் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!