முள்ளிப்பள்ளம் கிராமத்தில் மாமன்னர் மருதுபாண்டியர்களின் 219 வது குருபூஜை விழாவை முன்னிட்டு திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தாலுகா சோழவந்தான் அருகே உள்ள முள்ளிப்பள்ளம் கிராமத்தில் அகமுடையார் உறவின்முறை அறக்கட்டளை சார்பாக சுதந்திர போராட்ட வீரர்கள் மாமன்னர் மருதுபாண்டியர் அவர்களின் 219 வது குருபூஜையினை முன்னிட்டு அவர்களது திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. பின்பு இனிப்புகள் வழங்கப்பட்டது. தொடர்ந்து பொங்கல், புளியோதரை உள்ளிட்ட அன்னதானம் வழங்கப்பட்டது. உறவின்முறை தலைவர் கிருஷ்ணன் தலைமை வகித்தார். செயலாளர் தெய்வம், பொருளாளர் முத்துக்குமார், துணைத் தலைவர் போஸ் முன்னிலை வகித்தனர். இதில் நிர்வாகிகள் காமராஜ் ,ராசு, மார் நாட்டான், கேபிள் ராஜா மற்றும் கிராம பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். இதேபோலசோழவந்தான் பேருந்து நிலையம் வைகை ஆட்டோ சங்கம் மற்றும் சங்கம் கோட்டை கிராமத்தின் சார்பாக பேருந்து நிலையத்திலுள்ள மருதுபாண்டியர் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.செய்தனர்

வி காளமேகம் மதுரை மாவட்டம்