
தமிழ்நாடு கோழிப்பண்ணை வளர்ப்போர் சார்பாக கூலி உயர்வு கேட்டு கோழி குஞ்சு இறக்குவதை நிறுத்தி போராட்டம் இன்று முதல் மதுரை மாவட்டத்தில் அறிவித்துள்ளனர் இதுகுறித்து விக்கிரமங்கலம் அருகே கலிங்கப்பட்டி கிராமத்தில் மதுரை மாவட்டம் கோழிப்பண்ணை விவசாயிகள் நலச்சங்கம் நிர்வாகிகள் கூட்டம் நடந்தது இக் கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் அருண்பிரசாத் தலைமை தாங்கினார் இக்கூட்டத்தில் 28 தேதி முதல் கோழிப்பண்ணைக்கு குஞ்சுகள் இறக்குவதை நிறுத்தி போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்இதுகுறித்து மாவட்ட தலைவர் அருண் பிரசாத் கூறுகையில் 2013 ஆம் ஆண்டிலிருந்து அரசு ஒரு கிலோவிற்கு ரூபாய் நான்கு வீதம் கொடுத்தனர் அன்று இருந்த பராமரிப்பு செலவு இன்று பல மடங்கு செலவு கூடுதலாக உள்ளது ஆனால் கோழி கம்பெனிகள் அன்று கொடுத்த நான்கு ரூபாயிலிருந்து இன்று வரை உயர்த்தவில்லை இதுகுறித்து பலமுறை கம்பெனிகளுக்கு எங்களது நிலைமையை எடுத்துக்கூறி இதுவரை விலை உயர்வு இல்லாததால் நாங்கள் 28 10 2020 முதல் கோழிப் பண்ணைகளுக்கு குஞ்சுகள் இரக்க மாட்டோம் என்று முடிவு செய்துள்ளோம் இது தொடருமானால் நாங்கள் ஏற்கனவே குஞ்சுகளை வாங்கி உற்பத்தி செய்து உள்ள கோழிகளை அனுப்புவதை நிறுத்தி விடுவோம் என்று கூறினார்கள்பொருளாளர் ராமதாஸ் கூறுகையில் கோழிப்பண்ணை நடத்துவதற்கு இடம் அதற்கான செட்டு மின் வசதி குடிநீர் வசதி கோழிக்குஞ்சுகள் தங்குவதற்கு மஞ்சு அதைப் பாதுகாக்க வெப்பத்தை ஏற்படுத்த அடுப்புக்கரி நாட்டு மருந்து இப்படி எங்களுக்கு அதிக செலவு ஆகிறது கம்பெனியிலிருந்து ரூபாய் நாளுக்கு மேல் தர மறுத்து வருகின்றனர் நாங்கள் கிலோவுக்கு சுமார் 11 ரூபாய் செலவழித்து வருகிறோம் சுமார் 15 ரூபாய் அளவுக்கு கொடுத்தால்தான் நாங்கள் வாங்கிய கடன் மற்றும் எங்களின் உழைப்புக்கேற்ற கூலியும் கிடைக்கும் என்று கூறினார்இதுகுறித்து செயலாளர் மாயழகன் கூறுகையில் நாங்கள் கோழிப்பண்ணை நடத்துவதால் நல்ல லாபம் இருக்கிறது ஆனால் அந்த லாபம் முழுவதையும் கம்பெனி எடுத்துச்சென்று விடுகிறது இதனால் எங்களுக்கு கிடைக்கக்கூடிய வருவாய் கிடைக்காமல் வாழ்வாதாரம் பாதித்து வருகிறோம் இதனால் நாளை 28ஆம் தேதி புதன்கிழமையில் இருந்து கோழி குஞ்சு இறக்குவது இல்லை என்று முடிவு செய்துள்ளோம் என்று கூறினார்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.