Home செய்திகள் 108 ஆம்புலன்ஸ் வராததால் மாணவரை தூக்கிக்கொண்டு ஓடிய பொதுமக்கள்.

108 ஆம்புலன்ஸ் வராததால் மாணவரை தூக்கிக்கொண்டு ஓடிய பொதுமக்கள்.

by mohan

வேலூர் மாவட்டம் ஆம்பூர் புதுமனை பகுதியை சேர்ந்தவர் அக்பர்.  மகன் அப்பாஸ். இவர்கள் பெங்களூர் கே ஆர் புரம் பகுதியில் வசித்து வருகின்றனர். அப்பாஸ் அங்குள்ள தனியார் கல்லூரியில் பிபிஏ பட்டப்படிப்பு படித்து வருகிறார். இவர் உறவினர்களை சந்திப்பதற்காக ஆம்பூர் வந்தார். பின்பு செப்டம்பர் 12 ந்தேதி இரவு மீண்டும் பெங்களூரு செல்வதற்காக, ஆம்பூர் ரயில் நிலையத்தில் சென்னையில் இருந்து பெங்களூருக்கு செல்லக்கூடிய லால்பாக் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏற முயன்றார். அப்போது தவறி விழுந்து இடது கால் முற்றிலும் சேதமடைந்தது.

இதனை பார்த்த அங்கிருந்த ரயில் பயணிகள் மற்றும் ஆம்பூர் ரயில் நிலைய காவல்துறையினர், அந்த கல்லூரி மாணவனை மீட்டு அங்கேயே படுக்க வைத்துவிட்டு 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்தனர். சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக ஆம்புலன்ஸ் வராததால் அங்கிருந்த பொதுமக்கள் படுகாயமடைந்த அப்பாஸை, ஸ்ட்ரெச்சர் மூலம் தூக்கிக்கொண்டு சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் உள்ள ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்தனர். இதனால் ஆம்பூர் ரயில் நிலையம் மற்றும் மருத்துவமனை அருகே பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!