Home செய்திகள் நிலக்கோட்டையில் வேட்பாளர்களுக்கு ஆலோசனை கூட்டத்தில்தேர்தல் பணியில் ஈடுபடும் நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி கட்டாயம்.

நிலக்கோட்டையில் வேட்பாளர்களுக்கு ஆலோசனை கூட்டத்தில்தேர்தல் பணியில் ஈடுபடும் நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி கட்டாயம்.

by mohan

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் 13-ஆவது வார்டு ஒன்றியக் கவுன்சிலர் பதவிக்கு தற்செயல் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. இத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றிய தேர்தல் நடத்தும் அலுவலரும், திண்டுக்கல் மாவட்ட ஊராட்சி செயலாளரு மான  கிரி தலைமையில் நடைபெற்றது. தேர்தல் நடத்தும் உதவி அலுவலர் கிருஷ்ணன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் வேட்பாளர்கள் பின்பற்றவேண்டிய விதிகள் கூறப்பட்டதாவது: நிலக்கோட்டை ஒன்றியத்தில் 13வது வார்டு ஒன்றியக் கவுன்சிலர் பதவிக்கான தேர்தல் 9.10.2021 நடைபெறுவதால் பிரச்சாரத்தை 7.10. 2021 மாலை 6 மணிக்கு முடித்துவிட வேண்டும் என்றும், ஒரு வேட்பாளர் தேர்தல் செலவாக ரூபாய் 85 ஆயிரம் மட்டுமே செலவழிக்க படவேண்டும் என்றும், வீடு வீடாகச் சென்று பிரச்சாரம் செய்யும்போது அதிகபட்சம் 3 நபர்கள் மட்டுமே செல்ல வேண்டும், வாக்குச்சாவடி முகவர்கள் அல்லது வாக்கு எண்ணுகை முகவர்கள் அனைவரும்  குறைந்தது முதல் தவணைத் கொரோனா தடுப்பூசியாவது  செலுத்தி இருக்க வேண்டும், வாக்கு எண்ணுகை கூடத்தில் சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும், வெற்றி பெறும் வேட்பாளரிடம் யாரும் கைகுலுக்க கூடாது உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகளுடன் பிரச்சாரத்திலும் வாக்கு எண்ணிக்கை இடத்திலும் வாக்குச்சாவடிகளிலும் வேட்பாளர்கள் செயல்பட வேண்டும் என்று ஆலோசனை வழங்கப்பட்டது. இக்கூட்டத்தில் அ.தி.மு.க. வேட்பாளர் உதயகுமார். தி.மு.க வேட்பாளர் தியாகு,   தே.மு.தி.க.வேட்பாளர் அய்யர்பாண்டி, அ.ம. மு. கட்சி வேட்பாளர் செல்லப்பாண்டி, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் திருமலைசாமி, சுயேட்சை வேட்பாளர் கோபால் உள்பட பலர் கலந்து கொண்டனர்.படவிளக்கம்: நிலக்கோட்டையில் வேட்பாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடந்த போது எடுத்த படம்.

நிலக்கோட்டை செய்தியாளர் ம.ராஜா

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!