வழக்கறிஞர் பிரம்மா மீது தாக்குதல்;7 பேர் கைது-நெல்லையில் பரபரப்பு..

நெல்லை மாவட்டம் பாளையில் உள்ள பிரபல உணவகத்திற்கு இனிப்பு வாங்க சென்ற சமூக ஆர்வலரும், வழக்கறிஞருமான பிரம்மாவை அதன் நிர்வாகத்தினர் உணவகத்தினுள் பூட்டி வைத்து அடித்து தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.நெல்லை மாநகர் பாளை வ.உ.சி நகரை சேர்ந்தவர் வழக்கறிஞர் பிரம்மா.நெல்லை மட்டுமல்ல தமிழகம் முழுவதும் இவர் அரசுதுறை,தனியார் நிறுவனங்களில் நடைபெறும் முறைகேடுகளை தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் மூலம் வெளிச்சத்திற்கு கொண்டுவந்து பல வழக்குகளில் வெற்றி பெற்றுள்ளார்.இந்நிலையில் நெல்லை மாநகர பகுதிகளில் இயங்கும் பிரபல உணவு மற்றும் சுவீட் கடையில் அதிக விலைக்கு விற்கப்படுவதாகவும், தரமற்ற பொருட்கள் நுகர்வோருக்கு வழங்கப்படுவதாகவும் புகார் தெரிவித்துள்ளார்.இந்நிலையில் நெல்லை அரசு சித்த மருத்துவ கல்லூரி அருகிலுள்ள பிரபல உணவகத்திற்கு தனது நண்பர்களுடன் காபி அருந்திவிட்டு பில் கேட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து கடையிலிருந்த உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்கள் வழக்கறிஞர் பிரம்மாவை சரமாரியாக தாக்கியுள்ளனர்.இதன் வீடியோகாட்சி சமூக வலைதளங்களில் வைரலானது. இது குறித்து தகவலறிந்த வழக்கறிஞர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.இதனையடுத்து கடையின் உரிமையாளர் ஹரி, மணிகண்டன் உள்ளிட்ட ஏழு பேர்களை கைது செய்து பாளை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அதிகாரிகள் உதவியோடு தம்மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக வழக்கறிஞர் பிரம்மா தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்
அபுபக்கர்சித்திக்

KEELAI MEDIA & ADVERTISEMENT PVT.LTD

KEELAI MEDIA & ADVERTISEMENT PVT.LTD

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image