அவனியாபுரத்தில் சுதந்திரப் போராட்டத்தில் வெள்ளையரை எதிர்த்துப் போராடிய மருது சகோதரர்களுக்கு அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை .

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா அவனியாபுரத்தில் அதிமுக சார்பில் மருது சகோதரர்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்ஆண்டுதோறும் அக்டோபர் 27ம் தேதி மருதுசகோதரர்கள் குருபூஜை வெகுவிமர்சியாக நடைபெறுகிறது. இந்நிலையில் 219வது மருதுபாண்டியர்கள் பூஜையானது வருகிற 27ம் தேதி நடைபெறவுள்ள நிலையில்,மதுரை திருப்பரங்குன்றம் தாலுகாவிற்குப்பட்ட அவனியாபுரம் பகுதியில் உள்ள மருதுபாண்டியர்கள் இரட்டை சகோதர்கள் சிலைக்கு மதுரை வடக்கு சட்டமன்ற உறுப்பினர் V.V.ராஜன் செல்லப்பா மற்றும் ஒன்றிய கவுன்சிலர். நிலையூர் முருகன், பகுதி செயலாளர் ராமமூர்த்தி உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்…!!

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்