Home செய்திகள் புத்தனாம்பட்டி நேரு நினைவுக் கல்லூரியில் மின் உள்ளடக்கம் – தயாரிப்பதற்கான இரண்டு நாட்கள் பயிற்சிப்பட்டறை சிறப்பாக நடைபெற்றது.

புத்தனாம்பட்டி நேரு நினைவுக் கல்லூரியில் மின் உள்ளடக்கம் – தயாரிப்பதற்கான இரண்டு நாட்கள் பயிற்சிப்பட்டறை சிறப்பாக நடைபெற்றது.

by mohan

புத்தனாம்பட்டி நேரு நினைவுக் கல்லூரியில் மின் உள்ளடக்கம் -தயாரிப்பதற்கான இரண்டு நாட்கள் பயிற்சிப்பட்டறை 10.03.2020 மற்றும் 11.03.2020 அன்று நடைபெற்றது. கலை, அறிவியல், மேலாண்மை துறைகளைச் சேர்ந்த சுமார் 30 ஆசிரியர்கள் இப்பயிற்சிப் பட்டறையில் கலந்து கொண்டனர். கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தை சேர்ந்த கல்வியியல் தொழில் நுட்பத்துறை பேராசிரியர்கள் முனைவர் எம். பார்த்தசாரதி மற்றும் முனைவர் டி. எனோக் ஜோயல் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஆசிரியர்களுக்கு பயிற்சிஅளித்தனர். எம். பார்த்தசாரதி அவர்கள் பேசும்போது மின் உள்ளடக்கம் மின் கற்றலின் ஒரு பகுதியாகும். தலைப்பு வாரியாக கற்றல் தொகுப்பு, பேச்சு வடிவம், படத்தொகுப்பு ஆகியவற்றை வைத்து எவ்வாறு திரைக்கதை வடிவமைப்பது என்று செயல்முறையுடன் விளக்கினர். காணொளிக்காட்சி பதிவுப்பற்றி முனைவர் டி. எனோக் ஜோயல் எடுத்துரைத்தார். பயிற்சியில் கலந்து கொண்ட அனைத்து பேராசிரியர்களும் அவர்தம் துறையை சார்ந்த சிறு கற்றல் மின் உள்ளடக்கப்பதிவை தயார் செய்தனர்.

பயிற்சி நிறைவு விழாவில் கல்லூரி முதல்வர் முனைவர் பொன்பெரியசாமி தலைமை வகித்தார். கல்லூரிக்குழுத் தலைவர் திரு.பொன்பாலசுப்ரமணியன். செயலர். திரு. பொன்.இரவிச்சந்திரன் வாழ்த்துரை வழங்கினர். முனைவர் மு.முரளிதரன் மற்றும். கே.டி.தமிழ்மணி ஆகியோர் பயிற்சிப்பட்டறையை வழிநடத்தினர். வீடியோ பதிவு மற்றும் வடிவமைப்பு பணியினை உதவிப்பேராசிரியர் இரமேஷ், திரு. ஜெகதீசன் மற்றும் திரு. விவேகானந்தன் செய்தனர். விழா முடிவில் சுமார் 30 மின் உள்ளடக்கப்பதிவுகள் தயார் செய்யப்பட்டது.

செய்தி: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!