Home செய்திகள் இடைத்தேர்தலில் துரோகிகளுக்கு பாடம் புகட்டுவோம் – அதிமுக செயல் வீரர்கள் கூட்டத்தில் அமைச்சர்கள் ஆவேசம்…

இடைத்தேர்தலில் துரோகிகளுக்கு பாடம் புகட்டுவோம் – அதிமுக செயல் வீரர்கள் கூட்டத்தில் அமைச்சர்கள் ஆவேசம்…

by ஆசிரியர்
கோவில்பட்டி அருகே உள்ள விளாத்திகுளத்தில் அதிமுக சட்டமன்ற தொகுதி செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழக அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, கடம்பூர்.செ.ராஜூ, ராஜலெட்சுமி, துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், எம்.எல்.ஏக்கள் முருகையாபாண்டியன், செல்வமோகன்தாஸ் பாண்டியன்,  அதிமுக மாவட்டச் செயலாளர் சி.த. செல்லபாண்டியன், முன்னாள் எம்எல்ஏக்கள்  மார்க்கண்டேயன், மோகன், சின்னப்பன்மற்றும் அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் ஆதி திராவிட நலத்துறை அமைச்சர் ராஜலெட்சுமி பேசுகையில்,”ஏழை,எளிய மக்கள் வாழ்வாதாரத்திற்கு திட்டங்களை தந்தவர் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தந்தார்,அதனால் தான் ஆண்ட கட்சிக்கு மீண்டும் மக்கள் வாய்ப்பு தந்தார்கள்,அவர் மறைவுக்குப் பின் சிலர் தூரோகம் செய்து விட்டு சென்றதால் தேர்தல் வரும்  சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.ஆனால் ஜெயலலிதாவிற்கு துரோகம் செய்தவர்கள் இன்று வீட்டில் அழுது கொண்டு இருக்கிறார்கள்அதிமுக தேர்தலில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறும் என்றார்.
இதனை தொடர்ந்து தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூ பேசுகையில திருப்பரங்குன்றம், திரூவாருர் தேர்தல் இயற்கையான தேர்தல், மற்ற 18தொகுதிக்கான தேர்தல் செயற்கையான தேர்தல், தூரோகத்திற்கான தேர்தல்மக்கள் எம்.ஜீ.ஆர், ஜெயலலிதா என்ற இரட்டை இலைக்கு தான் வாக்களித்தனர்.. வேட்பாளர் பார்த்து கிடையாது, வைகோ, திருமாவளவன் மற்றும் லெட்டர் பேடு கட்சிகளை திமுக தாங்கி கொண்டு இருக்கும் நிலையில் உள்ளது. வரும் தேர்தல் எதிரிகளை மட்டுமல்ல துரோகிகளை சேர்த்து வீழ்த்தி அவர்களுக்கு ஒரு படிப்பினையை கொடுக்க வேண்டும என்றார்.
இதன் பிறகு தமிழக துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் பேசுகையில் இந்த தேர்தல் அரசியல் மாற்றத்திற்க்கான தேர்தல், அதிமுக ஆட்சி தொடர்ந்து நடைபெறுவதற்காக தேர்தல்,இதில் அதிமுக அமோக வெற்றி பெறும், கட்சிக்கு, ஆட்சிக்கும் தூரோகம் செய்தவர்களுக்கு பாடம் புகட்ட கூடிய தேர்தல், அதிமுக கூட்டணி பற்றி கவலைப்படாமல் தேர்தல் பணிகளை பார்த்து வருகிறது.புதியதாக கட்சி தொடங்குபவர்களை கூட்டணிக்கு அழைக்க திமுக தலைவர் காத்து கொண்டு இருக்கிறார். புலிக்கு பயந்தவர்கள் என் மேல் ஏறிக் கொள்ளுங்கள் என்று கூட்டணியை சேர்த்து வருகிறார் மு.க.ஸ்டாலின், அதிமுக தனித்து நிற்க தயார், திமுக தயாரா?, அதிமுக 20தொகுதியிலும் வெற்றி பெறும் என்றார்.
இறுதியாக தமிழக உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசுகையில் தமிழக முழுவதும் மக்களுக்கு தேவையான திட்டங்களை, ஜெயலலிதா வழியில்லை முதல்வர், துணை முதல்வர் வழங்கி வருகின்றனர், திட்டங்களை சொல்லி வாக்குகள் கேட்ட போதும், அதிமுகவினர் ஒற்றுமையாக இருந்து, வேட்பாளர் யாராக இருந்தாலும் உழைக்க வேண்டும், சகோதர்களுக்குள் சண்டைகள் இருக்கிறது .. நமக்குள் பேசி தீர்த்துக் கொள்ள வேண்டும், தூரோகிகளுக்கு இடம் கொடுக்க கூடாது, கடந்த தேர்தலுக்கு முன்பு ஜெயலலிதா சிகிச்சை பெற வெளிநாடு சென்று இருந்தால் இந்த ஆட்சி அமைந்து இருக்காது, அவருடன் உயிருடன் இருந்து இருப்பார்.தன் உயிரைக் கொடுத்து ஜெயலலிதா அமைத்த ஆட்சியை தூரோகிகள் கவிழ்க்க பார்க்கிறார்கள், அந்த தூரோகிகளுக்கு பாடம் புகட்ட  ஒவ்வொரு தொகுதியிலும் 1லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும் என்றார்.
கூட்டத்தில் உடல்நிலை பாதிக்கப்பட்ட அதிமுக நிர்வாகியின் ஒருவர் மகனின் மருத்துவ செலவுக்கு அதிமுக சார்பில் ரூ 1லட்ச நிதியை அமைச்சர் வேலுமணி வழங்கினார்.
கூட்டம் முடிந்து விளாத்திகுளத்தில் இருந்து கிளம்பி சென்ற அமைச்சர்களின் காரினை புதியதமிழக கட்சியினர் வழிமறித்து  தேவேந்திர குல வேளாளர் மக்களை  பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இடம் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனு அளித்தனர்.
செய்தி:- அஹமது ஜான்..

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!