கீழக்கரையில் பல பகுதிகளில் இன்று நோன்பு கஞ்சி வினியோகம்.

ரமலான் நோன்பு துவங்கும் முன்னரே கீழக்கரையில் நோன்பு கஞ்சி வினியோகம் களை கட்ட துவங்கியுள்ளது. மிஹ்ராஜ் கந்தூரி என்ற நிகழ்ச்சி தமிழகத்தில் இன்று பல பகுதிகளில் நடைபெறுகிறது. கீழக்கரையில் மிஹ்ராஜ் இரவை முன்னிட்டு சில பள்ளிகளில் நேற்று நெய் சாதம் செய்து மக்களுக்கு வழங்கினர். இந்நிலையில் இன்று சில இஸ்லாமியர்கள் நோன்பு அனுசரிப்பதால் கீழக்கரையில் பல பகுதிகளில் சமூக ஆர்வலர்கள் நோன்பு கஞ்சி காய்ச்சி வினியோகம் செய்தனர்.

இதன் ஒரு குழுவாக நடுத்தெரு பெத்தம்மாவாடியை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் ஹாமீது இப்ராகீம், ஹாஜா நசீர், செய்யது முகம்மது புகாரி தங்கள், பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா பொறுப்பாளர் நதீர், ஆதில் அமீன், ஜகுபர் ஹூசைன், அகமது பாரீஸ் ஆகியோர் நோன்பு அனுசரிப்பவர்களுக்கு உதவும் முகமாக நோன்பு கஞ்சி காய்ச்சி வினியோகம் செய்தனர். பொது மக்கள் பலர் நோன்பு கஞ்சியை பெற்று சென்றனர்.

1 Comment

  1. இன்று வலியுறுத்தப்பட்ட நோன்பு அல்லவே… எதற்காக இந்த பித்அத்தான செயல்…

Leave a Reply

Your email address will not be published.