வாலிபால் போட்டியில் வெற்றிக் கனிகளை குவித்து வரும் கீழக்கரை புதுத்தெரு (MYFA) இளைஞர்கள்…

கீழக்கரை புதுத்தெரு MYFA அணியினர் வாலிபால் போட்டியில் தொடர்ந்து பல வெற்றிகளைப் பெற்றுள்ளனர்.

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி புதூரில் (26.12.2017) அன்று நடைபெற்ற வாலிபால் போட்டியில் நான்காம் பரிசு Rs.10,000 வென்றனர்.

இராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புள்ளியில் (29.12.2017) அன்று நடைபெற்ற வாலிபால் போட்டியில் மூன்றாம் பரிசு Rs.10,000/- வென்றனர்

இராமநாதபுரம் மாவட்டம் வேதாளையில் (01.01.2018) அன்று நடைபெற்ற வாலிபால் போட்டியில் முதல் பரிசு வென்று சாதனை படைத்துள்ளனர்.

வெற்றி நாயகர்களை வாழ்த்துவதில் கீழை நியூஸ் நிர்வாகம் மகிழ்ச்சியடைகிறது.