கீழக்கரையில் ஹஜ் பெருநாள் தொழுகை சிறப்பாக நடைபெற்றது..

இஸ்லாமியர்களின் முக்கிய கடமைகளில் ஒன்று ஹஜ் ஆகும்.  அதைத் தொடர்ந்தது துல்ஹஜ் 10 பிறையில் தியாகத் திருநாளாக உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இன்று இந்தியாவில் தமிழகத்தில் கீழக்கரை மற்றும் அனைத்து பகுதிகளிலும் பெருநாள் தொழுகை இன்று சிறப்பாக நடைபெற்றது.

கீழக்கரையில் பாரம்பரியமான தொழுகைப் பள்ளியான ஜும்மா பள்ளி, தெற்குத் தெரு, கடற்கரைகள் பள்ளி மற்றும் அனைத்து ஜமாத் பள்ளிகளிலும் தொழுகை நடைபெற்றது. அதே போல் நபி வழித் தொழுகை தவ்ஹீத் ஜமாத், மக்தூமியா பள்ளி வளாகம், வடக்குத் தெரு சமூக நல அமைப்பு, கீழக்கரை கல்வி தர்ம அறக்கட்டளை, இந்தியன் தவ்ஹீத் ஜமாத் போன்ற சமூக அமைப்புகளால் பல இடங்களில் நடத்தப்பட்டது.

பெருநாள் தொழுகை நிறைவில் தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் வண்ணம் ஆரத் தழுவி வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டனர். மேலும் இந்த சிறப்புத் தொழுகையில் ஏராளமான ஆண்கள், பெண்கள், சிறுவர் மற்றும் சிறுமியர்கள் கலந்து கொண்டனர்.