கீழக்கரை அல் மதரஸத்துல் ராழியா சிறுவர்கள் மதரஸா தேர்வு முடிவுகள் வெளியீடு

கீழக்கரை இஸ்லாமிய கல்வி சங்கத்தின் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் அல் மதரஸத்துல் ராழியா சிறுவர் மதரஸாவில் இன்று 05.03.17 இரவு அரையாண்டு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு இருக்கிறது. அதனை மதரஸா மாணவர்கள் ஆர்வத்துடன் பார்த்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

கடந்த 29.01.17 முதல் 13.02.17 வரை நடைபெற்ற அரையாண்டு தேர்வில் இஸ்லாமிய கொள்கை, தொழுகை முறை, வரலாறு, பிரார்த்தனை, சூரா மனனம், நபி மொழிகள், குர்ஆன் ஓதும் முறை, நபிகளாரின் வாழ்க்கை உள்ளிட்ட பாடத்திட்டங்களின் கீழ் தேர்வு நடைபெற்றது. அதற்கான தேர்வு முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.