கீழக்கரையில் தரமற்ற சாக்கடை மூடிகளால் வீணாகும் மக்கள் பணம்..

கீழக்கரையில் சாக்கடை வாருகால் மூடி போடுவதில் கடந்த ஐந்தாண்டுகளில் மட்டும் ஏறத்தாழ ரூபாய் அறுபது இலட்சத்திற்கும் மேலாக நிதிகள் ஒதுக்கப்பட்டு ஒப்பந்த பணிகள் மூலம் வேலை நடை பெற்றுள்ளது. ஆனால் ஒப்பந்தப்படி மூடிகள் போடப்படாமல் பல்வேறு குளறுபடிகளை செய்து ஒப்பந்ததாரர்கள் அதிகாரிகளை ஏமாற்றியுள்ளனர்.


நகரின் பல்வேறு இடங்களில் போடப்பட்ட முடிகளும் தரமற்றவைகளாக உள்ளது. இந்த முறைகேடு சம்பந்தமாக ஒப்பந்ததாரர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி கீழக்கரை மக்கள் நல பாதுகாப்புக் கழகம் சார்பாக கீழக்கரை நகராட்சி ஆணையாளருக்கு கடந்த மாதம் புகார் மனு அளிக்கப்பட்டது.

இது சம்பந்தமாக நகராட்சி அளித்துள்ள பதில் கடிதத்தில் சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர்கள் மீது விரைவில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கீழக்கரை நகரில் அன்றாட நிகழ்வாக தினமும் தரமற்ற மூடிகள் உடைவதும் அதனை நகராட்சி பணியாளர்கள் மாற்றுவதும் என மக்கள் பணம் வீணாகி வருவது வேதனைக்குரிய விஷயமாகும். நாம் ஏற்கனவே நம் இணையதளத்தில் இது பற்றி செய்தி வெளியிட்டு இருந்தோம்…

கீழக்கரை சட்டப்போராளிகளின் சட்டப்போராட்டம் துவக்கம்.. வாருகால் மூடிகள் எண்ணும் பணி தொடங்கியது..

                                                                     பொறுப்புணர்ச்சியுடன் பணியாற்றும் நகராட்சி ஊழியர்கள்