இராமநாதபுரத்தில் யோகாசன போட்டி..

இராமநாதபுரத்தில் மாவட்ட யோகாசன சங்கம் மற்றும் ரோலர் ஸ்கேட்டிங் சார்பில் 13 ஆம் ஆண்டு யோகாசனப் போட்டி நடைபெற்றது. இதில் சிறுவர் முதல் பெரியவர்கள் வரை கலந்துகொண்டனர். இதில்  பஜ்ஜி முத்தாசனம், சக்கராசனம், சர்வாங்காசனம், வஜ்ராசனம், பத்மாசனம், உட்கட்டாசனம் என பல்வேறு ஆசனங்களை செய்து காண்பித்தனர்.

இப்போட்டியில்  வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்களை வழக்கறிஞர் சங்க தலைவர் ரவிச்சந்திர ராமவன்னியும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தங்கவேலன் வழங்கினார்கள். இந்த நிகழ்ச்சி மாவட்ட தலைவர் காசி தலைமையில் நடைபெற்றது.