மகளிர் தினத்தை முன்னிட்டு மதுரை, கொடைரோடு ரயில் நிலையங்களில் விழிப்புணர்வு பிரச்சாரம்..

மகளிர் தினத்தை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு ரயில் நிலையத்தில் ரயில்வே காவல் துறை சார்பாக மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. அப்பொழுது பெண் பயணிகளுக்கு இனிப்புகள் வழங்கிய ரயில்வே காவல்துறையினர் மகளிருக்கான காவலன் என்கின்ற புதிய செயலியை மகளிர்களின் மொபைல்களில் பதிவிறக்கம் செய்து அதனுடைய பாதுகாப்பு தன்மையும் ரயில்வே துறையின் செயல்பாடு குறித்தும் விளக்கம் அளித்தனர் மகளிர் தின வாழ்த்துகளை தெரிவித்தனர்.

அதே போல் மதுரை நிலையத்தில் பெண்கள் தினத்தை முன்னிட்டு பெண்கள் பாதுகாப்பு கருதி மதுரை இருப்புப்பாதை காவல் நிலையத்தில் காவலன் ஆஃப் பதிவிறக்கம் செய்து அதில் உள்ள தகவல்கள் மூலம் இரயில் பயணத்தில் பாதுகாப்பாக பயணம் செய்வது பற்றி விழிப்புணர்வு பிரச்சாரம் நடத்தப்பட்டது.

செய்தி வி.காளமேகம் மதுரை மாவட்டம்