Home செய்திகள் மார்ச்.8 உலக மகளிர் தினம்..பெண்மையை போற்றுவோம் ..

மார்ச்.8 உலக மகளிர் தினம்..பெண்மையை போற்றுவோம் ..

by ஆசிரியர்

பெண்களை தேவதைகளாகவும் கடவுளாகவும் பார்க்கும் சமூகம் தான் பெண்களை கேளிக்கை பொருளாகவும் போதை பொருளாகவும் பார்க்கிறது.

இன்று மகளிர் தின சிறப்பு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் அதே ஊடகங்கள் தான் பெண்களுக்கெதிரான கொலை, கொள்ளை, கற்பழிப்பு போன்ற காட்சிகளை தங்கள் ஊடகங்களில் சினிமா என்ற பெயரிலும், சீரியல் என்ற பெயரிலும், விளம்பரம் என்ற பெயரிலும் பெண்களை போகப்பொருளாக காட்டுகிறார்கள்.

பெண்ணே! பெண் சுதந்திரத்திற்கு பாடுபட்ட பாரதி இறக்கவில்லை. இதோ இன்று ஒவ்வொரு பெண்ணிற்குள்ளும் உயிரோடு வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறான். அடிமைதனத்தை அதிகாரதிமிரை, வன்முறையை உடைத்தெரிந்து வெளிவரும் ஒவ்வொரு பெண்ணில் இருந்தும் வெளிப்படுகிறான் பாரதி!

பாரதி அடிமைதனத்தை உடைத்தெரிய பாடுபட்டான். மேலை நாட்டு மோகத்திலும்,தவறான பாலியல் சிந்தனைகளிலிருந்தும் நம்மை நாமே பாதுகாத்துக் கொள்ள முன்வருவோம்.

பெண் சுதந்திரம் என்பது கேட்டு வாங்கக் கூடிய உரிமை இல்லை. பெண்களை மதிக்கப்படும் இடத்தில் தாராளமாக கொடுக்கப்படுகிறது.

கொடுக்கவில்லை என்றால் உடைத்தெரிந்து வெளியே வா! உனக்கென்று உள்ள உலகம் உன்னை வரவேற்கிறது.

பெண்ணை காக்க ஆயிரம் சட்டங்கள் வந்தாலும் தைரியமும் நேர்கொண்ட பார்வையும் நன்நடத்தையும் உன்னை வெளியே கொண்டு வரும்.

தைரியமாக வா! உன்னை வன் கொடுமை புரியும் அரக்கர்களிடம் இருந்து.

நன்கு படித்த பெண்களும் இன்று ஒரு சிலரால் அடிமையாகவும் தன் உள் இருக்கும் திறமையை வெளிக்கொணர முடியாமல் தவித்துவரும் சூழலில் சமூக வளைதளங்களை தவறாக பயன்படுத்தாமல் நல்ல முறையில் தமது முன்னேற்றத்திற்காக பயன்படுத்திக் கொள்ளலாம்.

பெண் சுதந்திரம் பேசும் பேச்சாக இருந்துவிடாமல் அது முறையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். ஒரு நாள் மட்டும் கொண்டாடபடவேண்டியதில்லை மகளிர் தினம் ஒவ்வொரு நாளும்! மகளிர் தினம் தான்.

அடிமைதனத்தையும், விலங்கினையும், கொடுமையினையும், உடைத்தெரிந்து பெண்களை போகப்பொருளாக காட்டப்படும் சிந்தனை களுக்கெதிராக வெளிவரும் ஒவ்வொரு புரட்சி பெண்ணுக்கும் நாளும் மகளிர் தினம்தான்!

செய்தியாளர்:-அபுபக்கர்சித்திக்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!