கீழக்கரையில் மேம்படுத்தப்படும் நகாராட்சி குப்பைக் கிடங்கு…

கீழக்கரையில் கடந்த 2012ம் ஆண்டில் கீழக்கரை நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் ரூ.21 லட்சம் செலவில் குப்பைக் கிடங்கு கட்டப்பட்டது. அந்த கிடங்கு ஆரம்பம் செய்த பின்பு கீழக்கரை நகர் சந்தித்து வந்த வீதியில் கொட்டுப்பட்டு வந்த குப்பைப் பிரச்சினை ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் வந்தது.

தற்பொழுது அக்குப்பைக் கிடங்கை மேம்படுத்த மாநில அரசால் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக அறியப்படுகிறது.  இந்த புதிய மேம்படுத்தும் திட்டத்தின் மூலம் மக்கும் மற்றும் மக்கிப் போகாத குப்பைகள் என பிரித்தெடுத்து கழிவுகளை அப்புறப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்படும்.  இதன் ஆரம்பக் கட்டமாக மதுரை தியாகராயக் கல்லூரியின் உதவியுடன் மண் ஆய்வு (Soil Report) செய்யும் பணி இன்று முதல் கீழக்கரை நகராட்சி ஆணையர் சந்திரேசகர் (பொறுப்பு) தலைமையில் ஆரம்பம் ஆனது.  இப்பணிக்காக கீழக்கரை நகராட்சி ஆயவாளர் மற்றும் பல துணைப் பணியார்கள் பணி நடக்கும் இடத்தில் குழுமியுள்ளார்கள்.

 இந்த முதல் கட்ட ஆய்வு சம்பந்தமான ஆவணங்கள் கிடைத்த பின்பு முறையாக அரசாங்கத்திற்க சமர்பிக்கப்பட்டு முறையான கழிவு மேலான்மை திட்டம் ( Waste Management System) ஆரம்பம் செய்யப்படும் என்று அறியப்படுகிறது.  இத்திட்டம் ஆரம்பம் செய்யப்பட்டால் கீழக்கரை நகராட்சியின் திட்ட கழிவு திட்டம் இன்னும் திறம்பட செயல்பட வாய்ப்புகள் உள்ளன.

1 Comment

  1. கீழக்கரையில் வீடுகள் மிகவும் நெருக்கமாகவும் குறுகலான பாதைகளும் கொண்டுள்ளன , மற்றும் பாதாள சாக்கடை திட்டம் கொண்டுவருவதும் மிக சிரமம் , கீழக்கரை மக்கள் , கீழக்கரையில் இருந்து ராம்நாடு செல்லும் E C R ரோடு பகுதில் நிலங்கள் காலி மனைகளாக உள்ளன ,இவற்றில் மக்களை வீடு கட்டி குடியேறுவதன் மூலம் நாம் சந்ததிகளுக்கு நல்ல காற்று ஓட்டம் உள்ள சுகாதாரமான வீடுகளை கட்டி கொடுக்க முடியும் , இவ் இடத்தில வீட்டு தோட்டத்துடன் வீடு கட்டலாம் , மற்றும் கீழக்கரை சேர்ந்த வசதி வாய்ப்பு உள்ளவர்கள் இவ் இடத்தில் தொழில் கூடங்கள் உண்டாக்கலாம் ,இதன் மூலம் கீழக்கரை விரிவாக்கம் செய்யலாம் , கீழக்கரை மார்டன் சிட்டி திட்டத்தினை இந்த இடத்தில செயல் படுத்தலாம் , இவ்விடங்களில் உள்ள கருவை மரங்களை அகற்றி மக்களுக்கு பயன் தரும் மரங்களை உண்டாக்கலாம் ,இவ் இடத்தில வணிக வளாகங்கள் காடடலம்,இவ் இடத்தில பொருட் காட்சிகள் , வாரந்திர சந்தைகளை ஏற்படுத்தலாம் , இதன் மூலம் இவ் இடத்தின் முன்னேற்றகளுக்கு உதவலாம் , நமது ஊரும் விரிவாக்க செய்தது போன்று இருக்கும்

Comments are closed.