வாடிப்பட்டி அருகே கண்மாய் உடைந்து  வீணாகும் தண்ணீர்… விவசாயிகள் வேதனை…

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே குட்லாடம்பட்டியில் மீனம்மாள் கண்மாய் உள்ளது . இக்கண்மாய்க்கு சிறுமலையிலிருந்தும், குட்லாடம்பட்டி அருவியில் இருந்தும்  நீர்வரத்து தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது. இந்தநிலையில்   கண்மாயின் மதகு அருகே உள்ள  கரை உடைந்ததால் தண்ணீர் வீணாக வெளியேறி வருகிறது. விளைநிலங்களில் தண்ணீர் பாய்ந்து வருகிறது. மேலும் குடிநீருக்காகவும் பாசனத்திற்காகவும் தேக்கி வைக்கப்பட்ட தண்ணீர் வீணாகி வருவதால் விவசாயிகள் வேதனையில் தவிக்கின்றனர். இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

செய்தியாளர் வி காளமேகம்