
சோழவந்தான்,நவ.19- சோழவந்தானில் உள்ள சுதந்திரப்போராட்டவீரர் கப்பலோட்டியதமிழன் வ.உ.சிதம்பரனார் 87 வது நினைவு தினத்தை முன்னிட்டு அனைத்து கட்சி நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.இந்நிகழ்ச்சி முன்னிட்டு திமுக சார்பாக நகர செயலாளர் வக்கீல் சத்திய பிரகாஷ் தலைமையில் பேரூராட்சி தலைவர் ஜெயராமன் வ உ சி சிலைக்கு மாலை அணிவித்து வ உ சி அறக்கட்டளை சார்பாக ஏற்பாடு செய்த அன்னதானத் திட்டத்தை தொடங்கி வைத்தார். முள்ளிப்பள்ளம் ஒன்றிய கவுன்சிலர் கீர்த்திகா ஞானசேகரன், வடக்குரத வீதி வெள்ளாளர் உறவின்முறை சங்கத் தலைவர் சுகுமாரன், முன்னாள் தலைவர் சந்திரசேகரன், முன்னாள் பேரூராட்சி துணைத் தலைவர் ராஜ்குமார், வ உ சி அறக்கட்டளை நிர்வாகிகள் ராஜசேகரன், சிங்கராஜ், விஜி உள்படப் பலர் வ உ சி சிலைக்கு மாலை அணிவித்தனர். பல்வேறுகட்சி நிர்வாகிகள்,தெற்குரதவீதி மேலரதவீதி உறவின்முறை சங்கநிர்வாகிகள் மற்றும் வெள்ளாள முன்னேற்றக் கழகத்தின் நிர்வாகிகள் வஉசி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். சோழவந்தான் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடு செய்திருந்தனர்.
செய்தியாளர் வி காளமேகம்
You must be logged in to post a comment.