
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் தேசிய வாக்காளர்கள் தினவிழாவில் கீழக்கரை வட்டாட்சியர் கணேசன், துணை வட்டாட்சியர் சிவக்குமார் ஆகியோர் தலைமையில் கீழக்கரை காவல் ஆய்வாளர் திலகவதி தேசிய வாக்காளர்கள் விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரியின் மற்றும் தாசிம்பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரி மாணவ, மாணவர்கள், கலந்து கொண்டு பொது மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், கீழக்கரை காவல் நிலையத்திலிருந்து வள்ளல் சீதக்காதி சாலை வழியாக கடற்கரை வரை சென்ற இந்த பேரணியில் வாக்களிப்பது நமது கடமை, வாக்களிப்போம் வளம் சேர்ப்போம், நல்ல வேட்பாளர்களை தேர்ந்தெடுப்பது நமது கடமை, போன்ற கோசங்களை எழுப்பினர்.
மேலும் கீழக்கரை, தாலுகா கிராம நிர்வாக அலுவலர்கள், கருப்பையா, மாரிமுத்து, சிவா, பூபதி மற்றும் முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரியின் என். எஸ். எஸ், அலுவலர்கள், ராஜேஷ் கண்ணன் மற்றும் கோவிந்தன், தாசிம்பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரி, விசாலாட்சி உட்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
You must be logged in to post a comment.