
ஜனவரி 25ம் தேதியான இன்று இந்தியா முழுவதும் வாக்காளர் தினமாக அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி கல்லூரி மற்றும் பள்ளி நிலையங்களில் மாணவ, மாணவிகளுக்கு வாக்களிப்பதின் அவசியத்தை பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது.
இன்று (25-01-2018) கீழக்கரை வடக்குத் தெரு முகைதீனியா மெட்ரிக் மேல்நிலை பள்ளி வளாகத்தில் நகராட்சி அலுவலர் சக்திவேல் உறுதி மொழி மேற்கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் பள்ளியின் தாளாளர் MM.மௌலா முகைதீன், கல்விக்குழு துணைத் தலைவர் MMS.முகைதீன் இப்ராஹிம், பொருளாளர் சேகு பசீர் மரைக்கா, இணை செயலாளர் MAY.ரஃபீக் மற்றும் பள்ளியின் முதல்வர் சேகு சஹபான் பாதுஷா ஆகியோர் கலந்து கொண்டனர்.
You must be logged in to post a comment.