பல்கலைக்கழக கூடை பந்து போட்டியில் சாம்பியன் கோப்பை வென்று செய்யது ஹமீதா கல்லூரி சாதனை…

அழகப்பா பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளுக்கு இடையிலான கூடைப்பந்து போட்டி முகமது சதக் பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்றது. அதில் செய்யது ஹமீதா கல்லூரி மாணவர்கள் முதலிடத்தை வென்று சாம்பியன் பட்டத்தை பெற்றனர்.

பரிசளிப்பு விழாவில் அழகப்பா பல்கலைக்கழக துணை உடற்கல்வி இயக்குனர் முனைவர் P.காளீஸ்வரன் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தார். அனைத்து ஏற்பாடுகளையும் உடற்கல்வி இயக்குனர் முனைவர் க.தவசிலிங்கம் செய்திருந்தார்.

வெற்றி பெற்ற அணியினருக்கு முகமது சதக் அறக்கட்டளை சேர்மன் யூசுப் செயலாளர் சர்மிளா மற்றும் இயக்குனர்கள் அனைவரும் பாராட்டினர்.

உதவிக்கரம் நீட்டுங்கள்..