Home செய்திகள்மாநில செய்திகள் பொதுமக்களிடம்குறைகளை கேட்டறிந்தார் விருதுநகர் எம்பி மாணிக்கம் தாகூர்..

பொதுமக்களிடம்குறைகளை கேட்டறிந்தார் விருதுநகர் எம்பி மாணிக்கம் தாகூர்..

by Askar

100 நாள் பணித்திட்டத்தில் பணிபுரியும் தொழிலாளிகளிடம் விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கத் தாகூர் பணிகளின் பற்றிய குறைகள் மற்றும் பொங்கல் தொகுப்பு மகளிர் உரிமைத் தொகை கிடைக்கிறதா எனவும் கேட்டு அறிந்து கிடைக்காதவர்களுக்கு சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் முறையீடு செய்து பெறவும் கட்சிக்காரர்கள் உதவி செய்ய வேண்டும் எனவும் கூறினார் – விருதுநகர் எம் பி மாணிக்கம் தாகூர்

விருதுநகர் பாராளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் தொகுதிக்கு ஒதுக்கப்பட்ட நிதியிலிருந்து 7லட்சம் மதிப்பீட்டில் பனையூர் பகுதியில் பயணிகள் நிழற்குடை அமைக்க அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

இதில் பங்கேற்ற விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் எம் பி மாணிக்கம் தாகூர் பயணிகள் நிழற்குடை பணிகளை அடிக்கல் நாட்டில் தொடங்கி வைத்தார்.பின்னர் பனையூர் பகுதியில் உள்ள நூறு நாள் சித்தப் பணிகளில் பணிபுரியும் ஊழியர்களை சந்தித்து உரையாடினார் இதில் 100 நாள் திட்ட வேலை எவ்வாறு நடைபெறுகிறது எவ்வளவு சம்பளம் என கேட்டறிந்தார். இதற்கு அப்பகுதி மக்கள் 240 கூலி தருகிறார்கள் என்றும் அதும் கடந்த வாரம் வேலை பார்த்ததில் இன்று வரை சம்பளம் மலர்ந்த படவில்லை எனவும் கூறினர் மேலும் மகளிர் உரிமைத் தொகை உங்கள் பரிசுத் தொகை ஆகியவை கிடைக்கப் பெற்றதாக என கேட்டார் பொங்கல் பரிசுத்தொகை இன்னும் வழங்கவில்லை எனவும் மகளிர் உரிமைத்தொகை சிலருக்கு கிடைக்கவில்லை எனவும் கூறினர் இதனை எடுத்து அதிகாரிகளிடம் மகளிர் உரிமைத்தொகை கிடைக்காதவர்களுக்கு கிடைக்க ஏற்பாடு செய்ய உதவ வேண்டும் எனக்கூறினார். பனையூர் பகுதியில் நடைபெற்ற பேருந்து பயணிகள் நிழற்குடை பூமி பூஜையில் விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் மதுரை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் அம்மா பெட்டி பாண்டி திருப்பரங்குன்றம் வட்டாரத் தலைவர் எம்பி முருகன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்..செய்தியாளர் வி காளமேகம்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com