Home செய்திகள்கீழக்கரை செய்திகள் தென்காசி மாவட்டத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டம்; அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார்..

தென்காசி மாவட்டத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டம்; அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார்..

by ஆசிரியர்

தென்காசி மாவட்டம் திருவேங்கடம் பேரூராட்சிக்குட்பட்ட திருவேங்கடம் கூட்டுறவு சிறப்பு அங்காடியில் பொங்கல் பரிசு தொகுப்பினை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் பொதுமக்களுக்கு வழங்கினார். தமிழக மக்கள் வரும் பொங்கல் 2024-ஐ மகிழ்ச்சியுடன் கொண்டாட ஏதுவாக அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு பச்சரிசி 1 கிலோ, சர்க்கரை 1 கிலோ, 1 முழு கரும்பு மற்றும் ரொக்கம் ரூ.1000 ஆகியவை பொங்கல் பரிசு தொகுப்பாக வழங்க தமிழக முதலமைச்சரால் ஆணையிடப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டத்தில் இத்திட்டத்தினை 10.01.2024 அன்று வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் தலைமையேற்று திருவேங்கடம் கூட்டுறவு பண்டகசாலை நடத்தும் நியாய விலைக் கடையில் வைத்து தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் துரை. ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தார்.

இத்திட்டத்தின் மூலம் தென்காசி மாவட்டத்தில் உள்ள 658 நியாய விலைக்கடைகளில் இணைக்கப்பட்டுள்ள 4,71,543 குடும்ப அட்டைதாரர்கள் ரூ.5266 கோடி மதிப்புள்ள பொங்கல் பரிசுத் தொகுப்பினை பெற்று பயன் பெறுவார்கள். இவ்விழாவில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் சுன் சோங்கம் ஐடக் சிரு, மாவட்ட வருவாய் அலுவலர் கு.பத்மாவதி, மாவட்ட வழங்கல் அலுவலர் அனிதா, தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் தனுஷ் எம்.குமார், தென்காசி சட்டமன்ற உறுப்பினர் ஈ. ராஜா, திருவேங்கடம் தாசில்தார் பாஸ்கரன், கூட்டுறவுச் சங்கங்களின் தென்காசி மண்டல இணைப்பதிவாளர் கு.நரசிம்மன், முதுநிலை மண்டல மேலாளர்/இணைப்பதிவாளர் ராஜேஷ், துணைப்பதிவாளர் (பொவிதி) செல்வி. ரா.திவ்யா, கூட்டுறவு சார்பதிவாளர் சி.கு.விஜயகுமார், சங்கச் செயலாளர் ஆ.விஜய ராஜகுரு, மாவட்ட கூட்டறவு ஒன்றிய செயலாளர் மாரியப்பன் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா.இளவரசி, உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) ரா.ராமசுப்பிரமணியன் மற்றும் சங்கப் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com