Home செய்திகள் நிலக்கோட்டையில,பல முறை,பல ஆண்டுகள், பல அதிகாரிகள், நோ ரெஸ்பான்ஸ்!- களம் இறங்கிய விடுதலைச் சிறுத்தைகள்…

நிலக்கோட்டையில,பல முறை,பல ஆண்டுகள், பல அதிகாரிகள், நோ ரெஸ்பான்ஸ்!- களம் இறங்கிய விடுதலைச் சிறுத்தைகள்…

by Askar

நிலக்கோட்டையில,பல முறை,பல ஆண்டுகள், பல அதிகாரிகள், நோ ரெஸ்பான்ஸ்!- களம் இறங்கிய விடுதலைச் சிறுத்தைகள்…

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே விநாயக புரத்தில் (ஈபி காலனி) 1998ல் வைகை அணை ஆற்றில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஆற்றோரம் இருந்த கிராமங்களில் விநாயக புரம் கிராமம் முழுமையாக பாதிக்கப்பட்ட நிலையில்,

அன்றைய அமைச்சர் ஐ.பெரியசாமி மற்றும் நிலக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் ஏ.எஸ்.பொன்னம்மாள் ஆகியோர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மேற்படி கிராமத்தை பார்வையிட்டு மக்களுக்கு நிவாரணங்களை வழங்கி, வீடுகளை இழந்தோருக்கு அரசின் சார்பாக சர்வே எண் 53/3ல், 4 ஏக்கர் 25 செண்ட் நிலத்தை ஒதுக்கீடு செய்து தரப்பட்டது.அந்த நிலத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் வீடு கட்டி குடிபோக விநாயக புரத்தச்சேர்ந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகிகள் பாலமுருகன்,பெரியசாமி ஆகியோர் முயற்சியில் பல முறை, பல ஆண்டுகளாக, பல அதிகாரிகளிடம், பட்டா கேட்டு மனு கொடுத்தும் கடந்த 25 ஆண்டுகளாக அலையா அலைந்தும் அரசு செவிசாய்க்கவில்லை. ஆகையால் இந்த விவகாரத்தை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் கையில் எடுத்துள்ளனர். விசிகவின் முயற்சியில் விநாயகபுரத்தை சேர்ந்த 100 க்கும் மேற்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களை ஒன்றினைத்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் ஊடக மையம் மாவட்ட அமைப்பாளர் பாலமுருகன், விசிகவின் பெரியசாமி தலைமையில் இன்று (13/02/2024) நிலக்கோட்டை வட்டாட்சியரை சந்தித்து மனு அளித்தனர். இந்நிகழ்வில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நில உரிமை மீட்பு இயக்க மாநில துணை செயலாளர் பெ.ச.உலகநம்பி, திண்டுக்கல் மைய மாவட்ட செயலாளர் ச.தமிழரசன், ஒன்றிய செயலாளர் வே.போதுராஜன், மற்றும் பாவலன், லெனின், ராஜாமணி, பாண்டி, மற்றும் இவர்களுடன் சித்தர்கள் நத்தம் ஊராட்சி மன்ற தலைவர் கருப்பையா,வார்டு உறுப்பினர் காளியம்மாள், பாதிக்கப்பட்ட பொதுமக்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மனு அளித்தனர்.

மனுவை பெற்றுக்கொண்ட வட்டாட்சியர், நிச்சயமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய முறையில் நிவாரணம் கிடைக்கும் வகையில் மனு மீதான நடவடிக்கைகள் எடுத்து பட்டா வழங்க ஆவன செய்வதாத உறுதி அளித்துள்ளார்.

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com