Home செய்திகள் திருப்பரங்குன்றம் பகுதிகளில் ஆளூநரை கண்டித்து திரும்பி போ, திரும்பி போ, கெட்அவுட் ரவி என திருப்பரங்குன்றம் திருநகர், அவனியாபுரம் பகுதிகளில் ஒட்டிய போஸ்டர்களால் பரபரப்பு..

திருப்பரங்குன்றம் பகுதிகளில் ஆளூநரை கண்டித்து திரும்பி போ, திரும்பி போ, கெட்அவுட் ரவி என திருப்பரங்குன்றம் திருநகர், அவனியாபுரம் பகுதிகளில் ஒட்டிய போஸ்டர்களால் பரபரப்பு..

by Askar

திருப்பரங்குன்றம் பகுதிகளில் ஆளூநரை கண்டித்து திரும்பி போ, திரும்பி போ, கெட்அவுட் ரவி என திருப்பரங்குன்றம் திருநகர், அவனியாபுரம் பகுதிகளில் ஒட்டிய போஸ்டர்களால் பரபரப்பு..

தமிழக ஆளுநர் ஆர் என் ரவி நேற்று சட்டப்பேரவையில் ஆளுநர் உரையை இடைநிறுத்தி வெளியில் சென்றதை கண்டித்து மதுரை தெற்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் திருப்பரங்குன்றம் பகுதிகளில் கெட் அவுட் ரவி என வால்போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா திருப்பரங்குன்றம் மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் தமிழக ஆளுநர் ஆர் என் ராவியை கண்டித்து திரும்பி போ, திரும்பிப் போ கெட் அவுட் ரவி என கண்டன போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.

தமிழக ஆளுநர் ஆர் என் ரவி தொடர்ந்து தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்படும் சட்ட மசோதாக்கள், ஆளுநர் உரையையும் புறக்கணித்து வருவது பொதுமக்களிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில் நேற்று சட்டமன்றத்தில் ஆளுநர் உரை நிகழ்த்தும் போது இடைநிறுத்தி வெளியில் சென்றது பல்வேறு தரப்பினரையும் அதிர்ச்சியும் ஆளுநர் மீதான பெரும் கண்டனத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இதனைத் தொடர்ந்து மதுரை புறநகர் தெற்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் மாவட்ட இளைஞரணி செயலாளர் விமல் ஆளுநர் ரவியை கண்டித்து திரும்பிப் போல் திரும்பிப் போ கெட் அவுட் ரவி என்ற வாசகத்துடன் போஸ்டர் ஒட்டியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செய்தியாளர் வி காளமேகம்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com