மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் தேமுதிகவின் கட்சி கொடியேற்றி இனிப்புகள் வழங்கப்பட்டது..
மதுரை வடக்கு மாவட்டம் ,வாடிப்பட்டி பேரூர் தே.மு.தி.க சார்பாக கட்சி கொடிநாள் கொடியேற்று விழா போடிநாயக் கன்பட்டியில் நடந்தது. இந்த விழாவையொட்டி, விஜயகாந்த் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்து, தே.மு.தி.க . கொடியேற்றி இனிப்பு வழங்கப்பட்டது. இந்த விழாவில், பேரூர் செயலாளர் பாலாஜி தலைமை தாங்கி, விஜயகாந்த் உருவப்படத்திற்கு மலர்துாவி கொடியேற்றினார். அவைத்தலைவர் கோபால் முன்னிலை வகித்தார். பொருளாளர் சோமநாதன் வரவேற்றார். முன்னாள் பேரூர் செயலாளர்கள் மாரியப்பன், ஜெயராஜ் இனிப்பு வழங்கினர். இதில், துணைச் செயலாளர் அரிமலை, ஏ.கே.மூர்த்தி, பேரூர் பிரதிநிதிகள் சங்கு பிள்ளை , கார்த்திக்,தாஸ், உதயா பாலு ,கண்ணன் ,முத்து , மணி உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ,மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளர் சத்திய லிங்கேஸ்வரன் நன்றி கூறினார்.
செய்தியாளர் வி காளமேகம்
You must be logged in to post a comment.