கீழக்கரை முஹம்மது சதக் பொறியியல் கல்லூரியில் +2 மாணவர்களுக்கான “வெற்றி நமதே” நிகழ்ச்சி ..

கீழக்கரை முஹம்மது சதக் பொறியியல் கல்லூரி மற்றும் இராமநாதபுரம் மாவட்ட பள்ளி கல்வித்துறை இணைந்து நடத்திய 102மாணவர்களுக்கான (“வெற்றி நமதே” கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி கல்லூரி முதல்வர் முனைவர் அப்பாஸ் மைதீன் தலைமையிலும், கல்லூரி டீன் முனைவர் முஹம்மது ஜஹாபர் முன்னிலையிலும் கல்லூரியின் S.M முஹம்மது சதக் தஸ்தஹீர் அரங்கத்தில் நடைபெற்றது.

கணினி பொறியியல் துறைத் தலைவர் முனைவர் கார்த்திகேயன் அனைவரையும் வரவேற்றர். கல்லூரி முதல்வர் தனது தலைமையுரையின் மூலம் +2 என்பது உங்களுடைய வாழ்க்கையை தீர்மானிக்கும் படிப்பு அதில் இறை நம்பிக்கையுடன் கூடிய கல்வியை விடாமுயற்சியுடன் கற்றால் எதையும் சாதிக்கலாம். எனவே ஒவ்வொரு மாணவரும் இறை நம்பிக்கையுடன் இந்த +2 தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று சிறந்த பொறியியல் துறையை தேர்வு செய்து சாதனையாளராக உருவாக வேண்டுமென வாழ்த்தினார். மேலும் கல்லூரியில் உள்ள பொறியியல் பாடப்பிரிவுகளின் சிறப்பும், அதன் மூலம் கிடைக்கக்கூடிய வேலைவாய்ப்பு பற்றியும் எடுத்துரைத்தார்.

கல்லூரி டீன் தனது சிறப்புரையில் பொறியியல் பட்டதாரிகளாக படித்து வருங்கால சாதனையாளராக உருவாக வேண்டுமென வாழ்த்தி எங்கள் கல்லூரியில் பொறியியல் பாடம் கற்றுதருவதோடு, Cloud computing, CISCO networking, CADD,  Big DATA, Data Mining, Embedee system,  ஆங்கிலப்புலமையை பயிற்றுவித்தல் மற்றும் வேலைவாய்ப்பிற்கு தேவையான தனித்திறனை மேம்படுத்துவதற்கான பயிற்சிகளும் அளிக்கப்பட்டு அதன் மூலம் பன்னாட்டு நிறுவனங்களில் வேலைவாய்ப்பிற்கு வழிவகுத்து கொடுக்கின்றோம் என தெரிவித்தார்.

​கல்லூரியின் கணினி பொறியியல் துறை துணைப் பேராசிரியை ரசினா பேகம் கல்லூரி மாணவர்களுக்கான பல்வேறு கல்வி உதவித்தொகைகள் பெறுவது பற்றி விரிவாக எடுத்துரைத்தார்.

​+2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற கையாள வேண்டிய வழிமுறைகள் பற்றி ஒவ்வொரு பாடப்பிரிவுகளில் சிறந்து விளங்கிய இயற்பியல் பிரிவு ஆசிரியர் தங்கபாண்டியன், அரசு உயர்நிலைப் பள்ளி, சாத்தனூர் வேதியியல் பிரிவு ஆசிரியர் சூர்யா, அரசு மேல்நிலைப் பள்ளி, மங்களகுடி கணித பிரிவு ஆசிரியர் நவநீத கிருஸ்ணன், முதல்வர் எலைட் பள்ளி, இராமநாதபுரம் ஆகியோர் மாணவர்களுக்கு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று நாளைய வெற்றியாளர்களாக விளங்க வேண்டும் என்று ஆலோசனைகளை விளக்கங்களுடன் எடுத்துக் கூறினர். மேலும் சாதனையாளர்கள் உருவாவது அவர்களுடைய விடாமுயற்சியால்தான் நீங்கள் நாளைய சாதனை படைக்கும் பொறியாளாராக உருவாவதற்கு விடாமுயறடசியுடன் படித்து வெற்றி பெற வேண்டுமென வாழ்த்தினர்.

​தேவிபட்டிணம், விவேகானந்தா மெட்ரிகுலேசன் பள்ளி முதல்வர் தீனதயாளன் மாணவர்களுக்கான உத்வேக உரையும்இ மாணவர்களின் நினைவாற்றலை எவ்வாறு வளர்த்து கொள்வது என்பதை பற்றி எடுத்துரைத்தார்.

​இந்த நிகழ்ச்சியில் இராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த இராமேஸ்வரம், மண்டபம், திருப்புல்லாணி, ரெகுநாதபுரம், இரட்டையூரணி, முதுகுளத்தூர். பார்த்திபனூர், திருவாடனை, ஏர்வாடி, கீழக்கரை ஆகிய ஊர்களில் அமைந்துள்ள அரசு மேல்நிலைப் பள்ளி மற்றும் தனியார் மேல்நிலைப்பள்ளிகளைச் சார்ந்த சுமார் 1800 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு இந்த வெற்றி நமதே நிகழ்ச்சியின் மூலம் +2 தேர்வினை எவ்வாறு எழுதுவது மற்றும் அதிக மதிப்பெண்கள் எப்படி பெறுவது போன்ற வழிமுறைகளை கேட்டு பயனடைந்தனர்.

​கல்லூரியின் இயந்திர பொறியியல் துறை பேராசிரியர் முனைவர். ஜெயசீலன் நன்றியுரை வழங்கினார்.

​இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் மயில்வேல்நாதன், கார்த்திகேயன் ஆகியோர் செய்திருந்தனர்.