இராமநாதபுரத்தில் மரக்கன்று நடுவிழா…

இராமநாதபுரம் பட்டிணம் காத்தான் ஊராட்சியில் ஆரோக்யா மருத்துவமனை, தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய மேம்பாட்டு திட்ட குடியிருப்போர் நலச்சங்கம், தேசிய பசுமை படை சார்பில் பட்டிணம் காத்தான் ஊராட்சி பகுதியில் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது. தலைவர் அ.நாகசாமி தலைமை வகித்தார். துணைத்தலைவர் எம்.அங்குசாமி, செயலாளர் எஸ்.நடராஜன், இணைச் செயலாளர் எஸ்.ராஜேந்திரன், பொருளாளர் எம்.கருப்பசாமி முன்னிலை வகித்தனர். பட்டணம் காத்தான் ஊராட்சி செயலாளர் நாகேந்திரன் வரவேற்றார்.

இராமநாதபுரம் ஆரோக்யா மருத்துமனை நிறுவனர் டாக்டர் ஆர்.பரணி குமார் மரக்கன்று நட்டார். செயற்குழு உறுப்பினர்கள் வி.நிறைமதி, எஸ்.பொன்னையாண்டி, கே.அழகர்சாமி எஸ்.எஸ்.ஷேக் அப்துல்லா, டி.கிருபாகரன், எம். பாட்ஷா, மாதவன், தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் ஆ.பெர்னாடிட், மற்றும் டாக்டர் மலையரசு, ஓம் சக்தி நகர் ரவி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஆரோக்யா மருத்துவமனை நிறுவனர் ஆர். பரணி குமார், டாக்டர் பி.வித்யா பிரியதர்ஷினி ஆகியோர் ஏற்பாடு செய்தனர்.

செய்தி:- முருகன், கீழைநியூஸ், இராமநாதபுரம்.