காமராஜர் நினைவு நாளை முன்னிட்டு காங்கிரஸ் ஓபிசி சார்பில் மாலை அணிவித்து மரியாதை.

வேலூர் மாவட்டம் காட்பாடி காந்திநகரில் உள்ள காமராஜர் சிலைக்கு அவரது நினைவு நாளை முன்னிட்டு வேலூர் மாநகர காங்கிரஸ் கமிட்டி ஓபிசி சார்பில் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.காந்திநகர் ஆக்சிலியம் மகளிர் கல்லூரி ரவுண்டானாவில் அமைந்துள்ள காமராஜர் சிலைக்கு நினைவு நாளை முன்னிட்டு வேலூர் மாநகர காங்கிரஸ் கமிட்டி ஓபிசி தலைவர் நோபல்லிவிங்ஸ்டன் தலைமையில் மாலை அணிவித்துமரியாதை செலுத்தினர்.காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அவரது படத்திற்கு மாலை அணிவிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் ஜான் பீட்டர், திருமால், கஜேந்திரன், கார்த்திக், சேகர், கோதண்டம் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.