வின்னவனூர் ஊராட்சியில் கிராம சபை கூட்டம்.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த வின்னவனூர் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் சிறப்பாக நடைபெற்றது.தமிழகத்தில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அனைத்து ஊராட்சிகளிலும் கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றி கிராம சபை கூட்டம் நடத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி செங்கம் ஒன்றியத்திற்குட்பட்ட அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடைபெற்றது இதனைத்தொடர்ந்து.செங்கம் அடுத்த வின்னவனூர் கிராமத்தில் கிராம சபை கூட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவர் சென்னம்மாள் வேலு தலைமை தாங்கி கிராமசபை கூட்டத்தில் கிராம மக்களுடன் கலந்துரையாடி ஊர் மக்களின் அடிப்படை வசதிகளை கேட்டறிந்தார்கிராமப்புற மக்களின் அடிப்படை வசதிகள் மற்றும் சாலை வசதிகள் நீண்டகாலமாக கூட்டுறவு கடை அங்கன்வாடி கட்டிடம் மற்றும் பல்வேறு தீர்மானங்கள் வலியுறுத்தி இயற்றப்பட்டது. கூட்டத்தில் ஊராட்சி மன்ற துணை தலைவர் சசிகலா ஊராட்சி அளித்த சிவக்குமார் வார்டு உறுப்பினர்கள் கிராம நிர்வாக அலுவலர் பள்ளி தலைமை ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் மகளிர் குழு குழுவினர், தொண்டு நிறுவன பொறுப்பாளர்கள் கிராமப்புற பொதுமக்கள் இளைஞர்கள் என அனைவரும் கலந்து கொண்டனர்

உதவிக்கரம் நீட்டுங்கள்..