காட்பாடி அருகே அரசு நலத்திட்ட உதவி வழங்கல்அமைச்சர் துரைமுருகன் பங்கேற்பு.

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த பிரம்மபுரம் தாங்கல் பாரஸ் பங்ஷன் மகாலில் அப்பகுதி மக்களுக்கு நலத்திட்ட உதவி களைநீர்வளமற்றும் கனிமவளத்துறை அமைச்சர் துரைமுருகன் வழங்கினார்.விழாவிற்கு மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் தலைமை தாங்கினார்.மாவட்ட வருவாய் அலுவலர் கிருஷ்ணமூர்த்தி வரவேற்றார்.பொதுமக்களிடம் பெறப்பட்ட மனுக்கள் சிலவற்றுக்கு தீர்வு வழங்கப்பட்டது.அரக்கோணம் எம்.பி.ஜெகத்ரட்சகன், வேலூர் எம்.பி.கதிர் ஆனந்த், எம்.எல்.ஏ. நந்தகுமார், ஊரக வளர்ச்சி திட்ட இயக்குநர் ஆர்த்தி, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் மாவட்ட வழங்கல் அலுவலர் (பொ) காமராஜ், வட்டாட்சியர் சரண்யா, வட்ட வழங்கல் அலுவலர் சுகுமாரன், வேலூர் மாவட்ட திமுக பிரதிநிதி பிரம்மபுரம் ராதாகிருஷ்ணன், பஞ்சாயத்து முன்னாள் தலைவர் தமிழரசி வெங்கடேசன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.