பேர்ணாம்பட்டு அருகே பரிதாபம் மின் ஊழியர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு.

வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு அடுத்த மிட்டப்பல்லிகிராமத்தை சேர்ந்தவர் பட்டாபி (43)இவர் பேர்ணாம்பட்டு நகர மின் வாரியத்தில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வருகிறார்.நேற்று காலை பட்டாபி வி.கோட்டாசாலையில் உள்ள டிரான்ஸ்பார்மரில் பழுதுநீக்கம் பணி செய்துகொண்டு இருக்கும்போது திடீரென மின்சாரம் தாக்கியதில் உயிரிழந்தார்.இதுகுறித்து பேர்ணாம்பட்டு காவல்துறை விசாராணை செய்துவருகிறது. இறந்த பட்டாபிக்கு மனைவி மற்றும் 2 மகள்கள் உள்ளனர்.