ஆன்மீக பெரியவர் கிருபானந்தவாரியார் பிறந்தநாள்அரசு விழாவாக கொண்டாட்டம்.

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த காங்கேயநெல்லூரில் பிறந்தவர் ஆன்மிக பெரியவர் திருமுருக கிருபானந்தவாரியார்இவருடைய பிறந்தநாளை அரசு விழாவாக கொண்டாட முன்னாள் அதிமுக ஆட்சியில் அப்போதையை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார்.அதன்படி கிருபானந்தவாரியாரின் சொந்த ஊரான காங்கேயநல்லூரில் நேற்று 25 – ம் தேதி அரசு விழாவாக கொண்டாடப்பட்டது. இதில் வேலூர் ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் அவரது ஆன்மீக சமாதி சிலைக்கு மாலை அணிவித்து வணங்கினார்.வேலூர் மாவட்ட அதிமுக செயலாளர் எஸ்ஆர்கே அப்பு, அவரது சிலைக்கு மாலை அணிவித்து வணங்கி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளர் மூர்த்தி முன்னாள் வேலூர் மாநகராட்ரி சுகாதார குழுத்தலைவர் ரமேஷ், எம்ஜிஆர் இளைஞர் அணி தலைவர் ராகேஷ, மாணவரணி மாவட்ட துணைச்செயலாளர் சுமந்த் 13 -வது வட்ட செயலாளர் திருநாவுக்கரசு மகளிர் அணியை சேர்ந்த லட்சுமி, திலகா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

உதவிக்கரம் நீட்டுங்கள்..