
வாணியம்பாடி ஜூலை 24 : திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே வளையாம்பட்டு பகுதி சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை ரியில்வே மேம்பாலத்தின் மீது வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியில் இருந்து காரில் பணத்தை எடுத்துகொண்டு திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி பகுதியை சேர்ந்த பைனான்சியர் மற்றும் ஹார்டுவேர் கடை நடத்தி வரும் ஞானசேகரன் என்பவர் தனது நண்பர்களுடன் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.அப்போது அவர்களை பின்தொடர்ந்து வந்த மற்றொரு காரில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் திடீரென ஞானசேகரன் காரை மடக்கி காரில் இருந்தவர்களை சரமாரியாக அரிவாள் போன்ற ஆயுதங்களில் தாக்கி காரில் இருந்த 25 லட்சம் ரூபாயை எடுத்துகொண்டு தப்ப முயன்ற போது இரு கார்களில் இருந்தவர்களுக்கு இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதனால் கார் கண்ணாடி உடைந்தது. அப்போது ஞானசேகரனின் நண்பர் ஒருவர் கொள்ளையர்கள் பயன்படுத்திய காரில் இருந்த சாவியை எடுத்து மேம்பாலத்தில் இருந்து 100 அடி பள்ளத்தில் வீசியுள்ளார். இதனால் காரில் தப்பமுடியாது கொள்ளை கும்பல் அங்கிருந்து பணத்துடன் நடந்து தப்பித்தனர்.சம்பவம் குறித்து ஞானசேகரன் வாணியம்பாடி கிராமிய காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு கிராமிய போலீஸார், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிபி சக்கரவர்த்தி தலைமையில் 20க்கும் மேற்பட்ட காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.அப்போது கொள்ளையர்கள் பயன்படுத்திய காரில் வழக்கறிஞர் என்று ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்தது மேலும் பதிவு என்னை பார்த்தபோது அதில் கர்நாடகா மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் கொண்ட 2 பதிவு எண்கள் பொருத்திய நம்பர் பிளேட் இருந்தது. போலீஸார் அதனை கைப்பற்றிய காவல்துறையினர் மேலும் காரிலிருந்து பேன்கார்டு, ஆதார் அட்டைகள்,மற்றும் காவலர்கள் பயன்படுத்தும் தொப்பி உள்ளிட்டவைகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.மேலும் முதற்கட்ட விசாரணையில் ஞானசேகரன் என்பவர் குடியாத்தம் பகுதியில் சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்ததாகவும் அதில் வெற்றி பெற்ற பணம் சுமார் 25 லட்சம் ரூபாய் கொண்டு வந்ததாகவும் இதனால் ஏற்பட்ட மோதலால் பணம் கொள்ளை போயுள்ளது என தெரியவந்துள்ளது.
You must be logged in to post a comment.