
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி, சேடபட்டி, எழுமலை உள்ளிட்ட பகுதி மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்காக ஆண்டிபட்டி வைகை அணையிலிருந்து மதுரை தேனி தேசிய நெடுஞ்சாலையின் ஓரமாக குழாய் மூலம் இப்பகுதி மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் மதுரை தேனி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள நக்கலப்பட்டியில் கூட்டுக்குடிநீர் திட்ட குழாய் உள்ளது. இந்த பகுதியில் உள்ள வரத்து கால்வாயினை ஊராட்சி நிர்வாகம் சார்பில் ஜேசிபி இயந்திரம் மூலம் தூர்வாரும் பணிகள் நடைபெற்றபோது எதிர்பாராத விதமாக குழாயில் உடைப்பு ஏற்பட்டு கால்வாயில் குடிநீர் ஆறாக சென்றது. இதனால் கடந்த 4மணி நேரத்திற்கு மேலாக பல லட்சம் லிட்டர் குடிநீர் வீணாகும் அவலம் ஏற்பட்டுள்ளது. இதனால் உசிலம்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள 300க்கும் மேற்பட்ட கிராம மக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட நிர்வாகம் குடிநீர் குழாய் உடைப்பை சரிசெய்ய வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உசிலைசிந்தனியா
You must be logged in to post a comment.