வேலூரில் மணல் கடத்தல் நபரிடம் தொலைக்காட்சி பெட்டி வாங்கியகாவலர் பணியிடை நீக்கம் .

வேலூர்சத்துவாச்சாரி காவல்துறை காவல் ஆய்வாளர் கருணாகரன் மற்றும் காவலர்கள் பெருமுகை பகுதியில் ரோந்து சென்றனர்.அப்போது பாலாற்றுமணலை டிராக்டர், லாரியில் கடத்தி வந்தவர்களை எச்சரித்து வண்டிகளை பறிமுதல் செய்ய உத்தரவிட்டார்.அப்போது அந்த வாகனத்தில் வந்த நபர் என்ன சார் நேத்து ஐயா கேட்டீங்கன்னு 40 இன்ச் டிவி வாங்கி கொடுத்தேன் இப்படி பண்ணலாமா? கேட்கஅதிர்ச்சி அடைந்த ஆய்வாளர் அந்த நபரிடம் விசாரணை செய்ததில் சத்துவாச்சாரி காவல்நிலையத்தில் வேலை செய்யும் காவலர் தினகரன் டிவியை வாங்கி தனது வீட்டுக்கு எடுத்து சென்றது தெரியவந்தது.இதுகுறித்து தகவல் எஸ்.பி.செல்வக்குமாருக்கு சென்றது. விசாரணைக்கு உத்தவிட்டார். தகவல் உண்மை என்று தெரியவந்தது.அதன்பேரில் தினகரன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.காவல் ஆய்வாளர் பெயரை சொல்லி, மாமூலாக தொலைக்காட்சி பெட்டி வாங்கி சென்றது பரபரப்பை ஏற்படுத்தியது.