
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே புத்தூர்பெரியமுல்லை கண்மாய் பகுதியில் மண் மற்றும் மணல் அழுவதாக ரகசிய தகவல் வட்டாட்சியர் ராமச்சந்திரனின் கிடைத்துள்ளது.அதனடிப்படையில் வட்டாட்சியர் ராமசந்திரன் வருவாய் ஆய்வாளர் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் சம்மந்தப்பட்ட இடத்திற்கு சென்று ஆய்வு செய்த போது அனுமதியின்றி சரளை மண் அள்ளிய ஜேசிபி மற்றும் டிராக்டர்கள் பறிமுதல் செய்து தளவாய்புரம் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது சோழபுரம் வருவாய் ஆய்வாளர் அமிர்தராஜ் புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .வட்டாட்சியர் வருவதை அறிந்த மண் கொள்ளை அடித்தவர்கள் டிராக்டரை மற்றும் ஜேசிபி வாகனத்தை நிறுத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிச் சென்று உள்ளனர் இவர்கள் யார் ஜேசிபி வாகனம் யாருக்கு சொந்தமானது என்று குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது .மேலும் தப்பி ஓடிய குற்றவாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்…
செய்தியாளர் வி காளமேகம்
You must be logged in to post a comment.