
வேலூர் மாவட்டம் காட்பாடி திமுக சட்டமன்ற உறுப்பினரும் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் மீது டில்லியில் உள்ள தேசிய தாழ்த்தப்பட்டோர் நல ஆணையரிடம்வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த சேர்க்காடு கிராமத்தை சேர்ந்த பி.சுப்பிரமணி கொடுத்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது:தாழ்த்தப்பட்ட பிரிவை சேர்ந்த என்னையும், என் சகோதரரையும் காட்பாடி முன்னாள் சேர்மன் முருகன் மற்றும் திமுக இளைஞர் அணிசெயலாளர் பெருமாளின் தந்தை கிருஷ்ணன் கடந்த 2021 மே மாதம் 19,28 தேதிகளில் தகாத வார்த்தைகளால் திட்டி எங்களை தாக்கி என் நிலத்தை அபகரித்து கொண்டனர்.இதுகுறித்து காட்பாடி தாலுகா திருவலம் காவல்நிலையத்தில் 2 புகார் கொடுத்தேன். ஆனால் ஒரு புகாருக்கு மட்டும்தான் சிஎஸ்ஆர் கொடுத்தார்கள்.இதுதொடர்பாக வேலூர் எஸ்.பி. டிஜிபி, முதல்வர் ஆகியோருக்குமேல்முறையீடு அனுப்பினேன். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லைஇதற்கிடையில் என் மீது முருகன் மற்றும் அவரது குடும்பத்தார் புகார் கொடுத்து இருப்பதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.அமைச்சர் துரைமுருகனின் உறவினர் முன்னாள் சேர்மன் முருகன்.கிருஷ்ணனும் திமுகவை சேர்ந்தவர்கள். அதனால்துரைமுருகளின் நிர்பந்தம் காரணமாக காவல்துறையினர் என்மீது பொய் வழக்குபதிவு செய்துள்ளனர்.2013-ம் ஆண்டில் தொடரப்பட்ட நில அபகரிப்பு வழக்கில்முருகன், கிருஷ்ணனுக்கு 3 ஆண்டு தண்டனை அளித்தது சென்னை உயர்நீதிமன்றம்
இவர்களுக்கு 2019 நவம்பரில் சுப்ரீம் கோர்ட் ஜாமீன் வழங்கியது.ஜாமீனில் வந்த இவர்கள் தொடர்ந்து நில அபகரிப்பு மற்றும் வன்கொடுமையில் ஈடுப்பட்டு வருகின்றனர்.முருகன், கிருஷ்ணுக்கு உதவியாக ஜாதி வன்முறையை தூண்டிவிடும் அமைச்சர் துரைமுருகன் மீது எஸ்சி/எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்ய உத்தரவிட வேண்டும்.முருகன், கிருஷ்ணனின் ஜாமீனை ரத்து செய்ய வேண்டும்.எனக்கும் எனது குடும்பத்திறகும் காவல்துறை பாதுகாப்பு வழங்க உத்தரவிட வேண்டும் என்று கூறியுள்ளார்.15 நாட்களுக்குள் வேலூர் ஆட்சியர், வேலூர் காவல் கண்காணிப்பாளர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
You must be logged in to post a comment.