உசிலம்பட்டி அருகே மக்களின் 20வருட கனவை நினைவாக்கிய சட்ட்மன்ற உறுப்பினர். தனது சொந்த செலவில் குடிநீர் தொட்டி அமைத்து கொடுத்தார்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கல்லூத்து ஊராட்சிட்குட்பட்ட கல்யாணிபட்டி கிராமத்தில் கடந்த 20வருடங்களாக பொதுமக்கள் குடிநீர்தொட்டி அமைத்து தர கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்கனவே இருந்த சட்டமன்ற உறுப்பினர்கள் நிறைவேற்றாத நிலையில் தற்போது உள்ள அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அய்யப்பன் ரூ.4லட்சம் மதிப்பீட்டில் 4 குடிநீர் தொட்டிகளை கிராமத்தில் அமைத்து கொடுத்துள்ளார். அதனைதொடர்ந்து குடிநீர் தொட்டி அமைக்கும் பணிகள் நிறைவு பெற்ற நிலையில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார். கடந்த 20வருடங்களுக்கு பிறகு மக்களின் கோரிக்கையை நிறைவேற்றி தந்த சட்டமன்ற உறுப்பினருக்கு அந்த பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.

உசிலைசிந்தனியா