வேலூர் அருகே பெங்களூருவிலிருந்து கடத்திவரப்பட்ட புகையிலை பொருள்கள் பறிமுதல்.

பெங்களூருவிலிருந்து சென்னைக்கு கன்டெய்னர் லாரியில் கடத்திவரப்பட்ட ரூ 20 லட்சம் மதிப்புள்ள தடைசெய்யப்பட்ட புகையிலை பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டு 3 பேர் கைது செய்யப்பட்டனர்.பெங்களூரிலிருந்து சென்னைக்கு தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் கடத்தப்படுவதாக வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது.காவல்துறையினர் பள்ளிகொண்டா டோல்கேட் பகுதியில் வாகன சோதனை செய்தபோதுஒரு கன்டெய்னர் லாரியில் தடைசெய்யப்பட்ட குட்கா இருந்தது தெரியவந்தது.அது சம்பந்தமாக சென்னை தாம்பரத்தை சேர்ந்த ராஜகுருவி (25)விழுப்புரம் குமார்(40) தூத்துக்குடி கோபால்(30) ஆகிய 3 பேரை கைது செய்தனர்.தப்பி ஓடிய லாரி டிரைவரை தேடி வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட குட்காவின் மதிப்பு ரூ 20 லட்சமாகும்.

உதவிக்கரம் நீட்டுங்கள்..