
வேலூர் அரசு பொறியியல் கல்லூரி முதல்வராக மீண்டும் எம்.அருளரசு பொறுப்பேற்றுக்கொண்டார்.கல்லூரியில் முதல்வராக இருந்த குமார் ஓய்வுபெற்றதையெடுத்து இங்கு இருந்த பேராசிரியர் பிலால் பொறுப்பு வகித்தார்.சென்னை கிண்டி தொழிற்நுட்ப இயக்குநரகத்தில் உதவி இயக்குநராக இருந்த அருளரசு மீண்டும் வேலூர் அரசு பொறியியல் கல்லூரியில் முதல்வராக பொறுப்பேற்றுக்கொண்டார்.இவர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு இங்கு முதல்வராக இருந்த கல்லூரியை பல்வேறு வகையில் மேம்படுத்தி தனியார் கல்லூரிக்கு நிகராக இருக்க செய்தவர்.பொறியியல் கல்லூரியை அரசின் தன்னாட்சி கல்லூரியாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று அருளரசு கூறினார்.
You must be logged in to post a comment.