
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் கெங்குவார்பட்டி லசாலியன் பரஸ்பர உதவி அறக்கட்டளையும், புனித வளனார் மேம்பாட்டு அறக்கட்டளையும் இணைந்து நடத்திவரும் மகளிர்களின் பொருளாதார முன்னேற்ற திட்டத்தில் சிறுதொழில் முன் கடன் வழங்கி வருகிறது. இந்த சிறு தொழில் செய்யும் கூலித் தொழிலாளிகள் மற்றும் தொழிலாளிகள் கடந்த சில மாதங்களாக ஏற்பட்ட கொரானாவின் தாக்குதலால தொழில் மற்றும் உயிர்ச் சேதங்கள் ஏற்பட்ட பாதிக்கப்பட்ட 500 குடும்பங்களுக்கு 4 லட்சம் மதிப்பிலான அரிசி, பருப்பு ,ரவை சர்க்கரை , கோதுமை போன்ற நிவாரண பொருட்கள் திமுக மாவட்ட கவுன்சிலர் நாகராணி ராஜ்குமார் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் நிர்வாக இயக்குனர் செபஸ்தியான், முதன்மைச் செயல் திட்ட அதிகாரி அந்தோணிசாமி, கிளை மேலாளர் தினேஷ்குமார், கள வளர்ச்சி அலுவலர்கள் முத்துப்பாண்டி, வினோஸ்,வினோத் ,அருண்பாண்டி உள்பட பலர் கலந்து கொண்டனர்.பட விளக்கம் – நிலக்கோட்டையில் மகளிர் சுய உதவிக் குழுவினர் களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கிய போது எடுத்த படம்.
நிலக்கோட்டை செய்தியாளர் ம.ராஜா
You must be logged in to post a comment.