Home செய்திகள் இளைய தலைமுறை வாக்காளர்களுக்கு இணைய வழியில் விழிப்புணர்வு..

இளைய தலைமுறை வாக்காளர்களுக்கு இணைய வழியில் விழிப்புணர்வு..

by mohan

தென்காசி மாவட்டத்தில் இளைய தலைமுறை வாக்காளர்களுக்கு இணைய வழியாக 100 சதவிகிதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி துவக்கி வைக்கப்பட்டது.தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார திட்டத்தின் சார்பில் வருகின்ற சட்டமன்ற பொதுத்தேர்தல் 2021-ஐ யொட்டி இளைய தலைமுறை வாக்காளர்களுக்கு இணையவழியாக 100 சதவீகிதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.இந்நிகழ்ச்சிக்கு தேர்தல் பார்வையாளர்கள் (பொது) டாக்டர்.ராஜு நாராயண சுவாமி, பிரகாஷ் பிந்து, டாக்டர் வேத பதி மிஸ்ரா, திலீப் சுவாமி ஆகியோர் தலைமை வகித்தனர்.இந்நிகழ்ச்சிக்கு முன்னிலை வகித்த தென்காசி மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்ததாவது: இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி 100 சதவீகிதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து பொதுமக்களிடம் பல்வேறு கலை நிகழ்ச்சிகளின் வாயிலாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வண்ணம் மாவட்டம் தோறும் மாவட்ட நிர்வாகம் மற்றும் மகளிர் சுயஉதவிக்குழுக்கள் மூலம் நகராட்சி, ஊராட்சி மற்றும் பேரூராட்சி அளவில் தொடர்ந்து வாக்களிப்பதன் அவசியம் குறித்து பொதுமக்களிடம் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.நமது மாவட்டத்தில் சுமார் 61000 மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினர்கள் உள்ளதால், பெண்சக்தி கொண்ட மாவட்டமாக நமது மாவட்டம் திகழ்கிறது. அதில் மகளிர் சுய உதவி குழுக்களின் பங்கு இன்றியமையாதது. குறிப்பாக விழிப்புணர்வு பேரணி, சிலம்பாட்டம், கும்மிப்பாட்டு, கோலாட்டம், ரங்கோலி, துண்டுப்பிரசாரம், இருசக்கர வாகன பேரணி, நாட்டுப்புற கலைஞர்களை கொண்டு தேர்தல் விழிப்புணர்வு பாடல்கள் என இது போன்ற பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.இந்நிகழ்ச்சிகளின் வாயிலாக 100 சதவீகிதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதில் சிறப்பாக செயல்படுத்திவருகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார். பின்னர் அதனடிப்படையில் இளைய தலைமுறை வாக்காளர்களுக்கு இணையவழியாக 100 சதவீகிதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் காவல் கண்காணிப்பாளர் சுகுணாசிங், மாவட்ட வருவாய் அலுவலர் இரா.ஜனனி சௌந்தர்யா, திட்ட இயக்குநர் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் பா.விஜயலெட்சுமி, உதவி திட்ட அலுவலர் சிவக்குமார் மற்றும் காவல்துறை, கல்லூரி மாணவர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com