Home செய்திகள் தமிழகத்தில் 90 லட்சம் இளைஞர்களுக்கு வேலை இல்லை; கடையநல்லூரில் வைகோ பரப்புரை..

தமிழகத்தில் 90 லட்சம் இளைஞர்களுக்கு வேலை இல்லை; கடையநல்லூரில் வைகோ பரப்புரை..

by mohan

கடையநல்லூர் சட்டமன்ற தொகுதியில் திமுக தலைமையிலான இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் முஹம்மது அபூபக்கர் எம்எல்ஏ-வை ஆதரித்து வைகோ பிரச்சாரம் செய்தார். அப்போது தமிழ்நாட்டில் 90 லட்சம் பேருக்கு வேலை இல்லை.அதிமுக அரசு தொடர்ந்தால் இனிமேல் தமிழ்நாட்டில் அரசு வேலைக்கு பீகார்காரன், உபி காரன்,ஒரிசாகாரன் தான் வருவான் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பேசினார்.தென்காசி மாவட்டம் கடையநல்லூர் சட்டமன்ற தொகுதியில் திமுக தலைமையிலான இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் முஹம்மது அபூபக்கர் எம்எல்ஏ-வை ஆதரித்து பொது மக்களிடையே வாக்குகள் சேகரித்தார்.அப்போது கடையநல்லூர் மணிக்கூண்டு அருகே திறந்த வேனில் நின்று வைகோ பேசியதாவது:தூத்துக்குடியில் செயல்படும் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக 26 ஆண்டுகள் நான் போராடினேன். அந்தப் பகுதியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக ஜனநாயக முறைப்படி போராட்டம் நடத்தியவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது.ஸ்கிராப் பொருட்கள் விற்பனை செய்து கொண்டிருந்த ஸ்டெர்லைட் உரிமையாளர் இன்று உலகப் கோடீஸ்வரர்களில் ஒருவராக உள்ளார். அதன் விளைவாக அரசாங்கத்தையும் போலீசையும் தன் பாக்கெட்டில் வைத்துள்ளார். இதனால் கலெக்டரிடம் மனு கொடுக்க ஊர்வலம் வந்தவர்களை போலீஸ்காரர்கள் அவர்களே வாகனங்களுக்கு தீ வைத்துவிட்டு மனு கொடுக்க வந்த 13 பேர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியதால் 13 உயிர்கள் பலியாகியது. இஸ்லாமியர்களுக்கு எதிராக குடியுரிமை சட்டத்தை நாடு முழுவதும் பொதுமக்கள் எதிர்த்த நிலையில் நாடாளுமன்றத்தில் அதிமுக உறுப்பினர்கள் ஆதரித்து வாக்களித்தனர். விலைவாசி விண்ணைத்தொடும் அளவிற்கு உயர்ந்து விட்டது. மூன்று மாதத்தில் 225 ரூபாய் வீட்டு உபயோக கேஸ் கூடி விட்டது. இப்பொழுது பைசா அளவிற்கு குறைத்து மக்களை ஏமாற்றுகிறார்கள். தமிழ்நாட்டில் 90 லட்சம் இளைஞர்களுக்கு வேலை இல்லை. வேலை இல்லா நேரத்தில் அமித்ஷா சொல்கிறார் இனிமேல் நாங்கள் டெல்லியிலேயே தான் வேலைக்கு ஆள் எடுப்போம். அப்படி என்றால் கடையநல்லூருக்கு ஒரிசாகாரன், பீகார்காரன் ,உபிகாரன்தான் வேலைக்கு வருவான். நாட்டை துண்டாட ஒரே நாடு, ஒரே கலாச்சாரம், ஒரே பண்பாடு,ஒரே மொழி என பன்முகத்தன்மை உள்ள இந்தியாவை சிதைக்க மத்திய பாஜக அரசு முயற்சிக்கிறது என்றார் வைகோ. இதில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் முஹம்மது அபூபக்கர், மதிமுக மாவட்டச் செயலாளர் ராஜேந்திரன், திமுக மாவட்ட பொறுப்பாளர் செல்லத்துரை , திமுக நகர செயலாளர் சேகனா, முஸ்லிம் லீக் நகரதலைவர் செய்யது மசூது, மதிமுக நகரசெயலாளர் முருகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com