வேலூர் மைனர் பெண்ணை கடத்தி திருமணம் செய்தசெஞ்சி மைனர் மாப்பிள்ளை கைது.

வேலூர். பிப்.22- வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த திருவலம் அருகில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 17-வயது நர்சிங் படித்து பாதில் நின்ற ஒரு மைனர் பெண்இந்த மைனர் பெண் கடந்த 4-ம் தேதி தனது வீட்டிலிருந்துமாயமானார்.இதுகுறித்து அவரது பெற்றோர் திருவலம் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.உதவி ஆய்வாளர் நாராயணன் வழக்குபதிவு செய்து விசாரணை செய்துவந்தார்.இந்நிலையில் நேற்று முன்தினம் திருவலம் அடுத்த சேர்க்காடு கூட்ரோட்டில் சந்தேகத்தின் அடிப்படையில் அங்கு நின்று இருந்த 2 பேரை விசாரித்தனர்.அது தேடப்பட்டமைனர் ஜோடி என்று தெரியவந்தது.விசாரணை செய்ததில் அந்த வாலிபரின் பெயர் சதீஷ்குமார்(21) என்றும் அவன் விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த கெங்காபுரத்தை சேர்ந்தவன் என்று தெரியவந்தது.மைனர் பெண்ணை கடத்தி திருமணம் செய்தது தெரியவந்தது.திருவலம் காவல்துறையினர் அவனை போக்சோவில்கைது செய்து காட்பாடி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின்பு சிறுவர் சீர்திருத்தப்பள்ளிக்கு அனுப்பி வைத்தனர்.வேலூர் புதிய பேருந்துநிலையத்தில் மூட்டை தூக்கும் தொழிலாளியாக வேலை செய்தபோது இந்த மைனர் நர்சிங் மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டு உள்ளது.