பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து கம்யூ. கட்சியினர் ஆர்ப்பாட்டம்:

மதுரை மாவட்டம்,சோழவந்தான் மாரியம்மன் கோவில் சன்னதி தெருவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியக் குழு சார்பாக ஆர்ப்பாட்டம்நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு, ஒன்றியச் செயலாளர் வேல்பாண்டி தலைமை தாங்கினார். ஒன்றியக் குழு உறுப்பினர்கள் கந்தவேலு பொன்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்டச் செயலாளர் ராமகிருஷ்ணன் வேனை கயிறு கட்டி இழுத்தனர் . கேஸ் சிலிண்டருக்கு மாலை அணிவித்தனர் பின்னர் பெட்ரோல் டீசல் மற்றும் கேஸ் சிலிண்டர் விலை உயர்வை திரும்ப கோரி ஆர்ப்பாட்டம் மற்றும் கூட்டம் நடந்தது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்