43
வேலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் களவுபோன, தவறவிட்ட செல்போன்களை கண்டுபிடித்து கொடுக்கும்படி சம்மந்தப்பட்ட காவல்நிலையத்தில் பாதிக்கப்பட்டோர் புகார் அளித்தனர்.மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ்கண்ணன் உத்தரவுப்படி சைபர் க்ரைம் போலீசார் வழக்குபதிவு செய்து 60 பேரின் செல்போனை கண்டுபிடித்து அதனை உரியவரிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி வேலூர் எஸ்.பி.அலுவலகத்தில் நடந்தது. சம்மந்தப்பட்டவர்களிடம் எஸ்.பி.ராஜேஷ்கண்ணன் ஒப்படைத்தார்.உடன் டிசிபி, டிஎஸ்சி பூபதிராஜ், சைபர் க்ரைம் பிரிவை சேர்ந்த லதா, உமாராணி, ரவி, கருணாகரன் உள்ளிட்ட பலர் இருந்தனர்.
You must be logged in to post a comment.